பக்கம்:உத்திராயணம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏吕会 லா, ச. ராமாமிருதம்

ஆமாம், கவனிக்கணும்- ஆபீஸில் யகதிணிமோஹினி செல்லம் போகவரக் காது கேட்க முணுமுணுத் தாள்

அவனுக்குக் கண் துளும்பிற்று. அசல் இடத்து சம் பந்தம் என்றால் இப்படித்தானிருக்குமோ. இரக்கமேயில் வாமல், அத்தை மகள், மாமன் மகள் என்று கட்டியிருந்தால் ரத்தபாசமேனும் இருக்கும். இதெல்லாம் உடல் வெறி யோடு சரி. இல்லாவிட்டால் கலியாணமாகி அஞ்சு வருடத்துக்குள் இரண்டா? அவனுக்கும் அவளுக்கும் பூரா இரண்டு வயதுகூட வித்தியாசமில்லை, காரணம்: லபி அப்படி

ஆனால் அதே ரத்தபாசம் அவனுக்கும் அப்பாவுக்கும் இடையில் இல்லை.

ஆபீஸில் ஏதோ கூட்டலைப் போட்டுக்கொண்டே அவன் கேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருந்தான்.

成 宗 岑

லெப்டினன்ட் ராமப்ரஸாத் குடும்பத்தில், தலை முறைக்குத் தலைமுறை ஏதேனும் ஒரு பேர் ராம சப்தத் துடன் வழங்கும்... ராமப்ரஸாத், கொள்ளுத் தாத்தா வுக்குத் தாத்தா கோடி ராமநாமம் ஜபித்தவராம். அங்கிருந்தே பெயர்ப் பழக்கம் கடைபிடித்தாகிறது.

லெப்டினன்ட்-எப்போ பதவி உயர்ந்தது? களத்தி லேயே ஆகியிருக்க வேண்டும். இந்த விஷயம்-தந்தி கூறும் விஷயம், அப்பட்டமாக, நினைக்கவே அச்சமாயிருந்தது. எங்கு எப்படி நேர்ந்திருக்கும்? பர்மாவிலா? மலேயாக் காடு களிலா? நடுக்கடலிலா? இல்லை இந்தப் பக்கம் ஜெர்மனி, ரஷ்யா- அதுவும் யுத்தம் முடிவாட்டத்தில், வயித் தெரிச்சல்,