பக்கம்:உத்திராயணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் 魔留5

தந்தியில் என்ன தகவல் தெரிவிக்கின்றான்கள்? Lost in Action. முதலில் உடலே கிடையாது. தந்தி ஜே.பியில் தேளாய்க் கொட்டிற்று சாவுத் திண்டல் சடங்குகள், பாபம், புண்ணியம், நரகம்-மூலைக்கொன்று அவைகளின் அரூபங்களில் பயமுறுத்தின. யாவற்றிற்கும் மேலாக, அம்மாவை மங்கலம் களைந்த நிலையில் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. No! இது அம்மாவுக்கு நேரக் கூடாது. நடக்கறது நடக்கட்டும். என்ன நடக்கப் போகிறது? மிலிடரி பென்ஷன் இதுவரைபோல் பாங்கில் அம்மா கணக்கில் சேர்ந்துவிடப் போகிறது. வராவிட்டாலும் அம்மாவுக்கு என்ன தெரியப் போறது? காண்பித்த இடத்தில் கையெழுத்து, கோனல் மாணலா ஏதோ ஒரு கோலம்வேறென்ன?

நம் சமுதாயத்தில் இந்தச் சிவப்பையும் மஞ்சளையும் பெண்களுக்கு உயிர் நிலையா என்னம்மா ஜூல் காட்டி யாறது? மற்ற நாகரிகங்களில் இந்தக் கொடுமை உண்டா? சில ஜாதிகளில் நடுவிட்டுத் தாலி இன்னும் பழக்கத்தில் இருக்கிறது. இதெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. ராமா! ராமா!' என்று காதை பொத்திக்கொண்டு போனவா கரையேறணும்னு வேஷத்தை போட்டுக்கொண்டு விடுவாள். அம்மாவோ மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை, அசடு, சமர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு ஆவியல் சிக்கு கண்டுவிட்ட பூணுால் மாதிரி நுனி கண்டுபிடிக்க முடியாது.

இப்போது இருக்கிறபடி நடக்கிறவரை நடக்கட்டுமே. நாளடைவில் தானாகவே நம்பிக்கை தளர்ந்து, ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகி, அந்தச் சமயத்தில் அதற்குரிய சடங்குகள் பிராயச்சித்தங்கள் நம் சாஸ்திரத்தில் எதற்குக் குறைச்சல்? வைதீக தர்மம் என்று எல்லாம் வயிற்றுப் பிழைப்புத்தான். எரிகிற வீட்டில் பிடுங்கியவரை

• ‘aréârgșoium balance off #ir; what is this wool gathering?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/145&oldid=544234" இலிருந்து மீள்விக்கப்பட்டது