பக்கம்:உத்திராயணம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置岛貌 லா ச. ராமாமிருதம்

புத்தகத்தின் மேல் முஸ்திப்பாகக் குனிந்தான்.

நான் வயிற்றில் பூகம்பத்தைக் கட்டிக்கொண்டிருப்பதை இவன் என்ன கண்டான்? என்னிக்கும் ஒரே பாட்டுத்தானா?

தவிர, அம்மாவைக் கோரணி பண்ணுவதற்கு , அந்தத் தியாகத்தை அம்மா செய்வதற்கு என் அப்பன் தகுதியில்லை.

அப்பாவுக்கு fieldக்கு உத்தரவு வந்ததும், உள்ளுர வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடியாத பயம் வாட்டி னாலும், அதையும் தாண்டி, சுமையிறங்கினாற்போல் உஸ்’ ஒன்று ஸ்ேது உணர்ந்தான். இனி வீட்டில், அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையில் நாள் தவறினாலும் தான் தவறாத சண்டைக்கு ஓய்வு காணலாம். அம்மாவுக்கு அப்பாவின் வசவு, அடி உதைகளினின்று நீண்ட விடுமுறை. வீட்டி லேயே மழை பெய்து ஓய்ந்தாற்போல் ஒரு நிம்மதி. மூர்க்கன்-பெரியவாள் சண்டையைக் குழந்தைகளுக் கெதிரில் போடலாமா என்று பார்க்கமாட்டான். சண்டை எப்போ, எப்படி மூளும் என்றே தெரியாது.

ஒரு தடவை அம்மாவைக் குண்டுகட்டாய் அலேக்காய் அப்படியே தூக்கி, சுவரில் வீசி எறிந்திருக்கிறான் பாரு, அவன் அறையுள் நுழைவதற்கும் அந்தக் காகதிக்கு சாகதியா வதற்கும் சரியாக இருந்தது. அந்தமாதிரி பந்தாடலுக்கு அகாத்ய பலம் வேண்டும். அம்மா ஒன்றும் பூஞ்சையில்லை.

ஆனால் அப்பா மட்டும் லேசா? அப்பா ராமனா? ராr. லன்னா! வாட்டசாட்டமா நல்ல உயரம். நல்ல சிவப்பு. கொத்து மீசை. அடர்ந்த சுருட்டை மயிர். அடர்ந்த புருவங்களினடியில் தழல் வீசும் மேட்டு விழிகள். அழகன். கம்பீரன். கோவில் மணிபோல் கார்வை கொண்டு குரலில் ஒரு அடிக்கனம்