பக்கம்:உத்திராயணம்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் 芷4星

Lorry?

Level crossing?

யாருக்கும் அகஸ்மாத்தாய்ப் படனும்:

அப்புறம் அம்மா, செல்லம், குழந்தைகள்?

செல்லம் படித்த பெண், உத்தியோகம் பண்ற பெண், எப்படியும் பிழைத்துக்கொண்டு விடுவாள். அம்மாதான் பாவம்-எனக்கு ஏன் இப்படித் தோணறது? இந்த வீட்டுக்கு என்ன வந்துடுத்து? தப்பிக்கவே வழியில்லையா?

அம்மாதான் பாவம், பிரகாஷ் அப்படியே அவன் தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கான். அம்மா, என்னை மன்னிச்சுடு. நான் எல்லாம் நல்லதுக்குத்தான் நினைக் சேன் -

ரயில் தடதடவென்று அவன்மேல் பாய்ந்தோடிற்று. எப்படி நான் தண்டவாளத்திடையில் விழுந்தேன், விழ முடியும்? All over, இதென்ன புது உலகில் விழிப்பா?

விடிவிளக்கில் கூரையில் துலங்கள் பாய்ந்தன.

அம்மாடி! மார் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. கனவே இப்படி இருந்தால் நனவு எப்படியிருக்கும்? அதுவும் அப்பா உங்களுக்கு-அப்பா! அப்பா யாரோ தோளைப் பிடித்து உலுக்குகிறார்கள்.

என்ன துக்கமாடி துர்க்கனாக் காண்றேள் உங்களுக்கு இந்த நாலு மாஸ்மா என்னமோ பிடிச்சுண்டிருக்கு: சந்தேகமேயில்லை. ’’

அன்று வெள்ளிக்கிழமை. பிற்பகல் அம்மா எங்கோ சுபாஷணி பூஜையாம், இன்னும் திரும்பவில்லை. யார் எங்கே போனால், எங்கே வந்தால் என்ன?