பக்கம்:உத்திராயணம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் 翼全岛

(அதுதான் முறை. சூடாமணிதான். தந்திக்குரியவர் அவர்தானே! அப்பாடி!

திடீரென்று அந்த மேட்டு விழிகள் கோபத்தில் விரிந்தன.

என்னடா தந்தியைப் பார்த்து உன் அம்மா வேஷம் போட்டுண்டுட்டாளா'

அப்பா அப்படிக் கேட்டது அவனுக்கும் சிரிப்பும் அழுகை யும் ஒரே சமயத்தில் பீறிட்டன. காலடியில் பூமி கிடு கிடென... அப்பா அவனைச் சட்டெனத் தாங்கிக்கொண் .டார். என்ன தோள்கள்:

“He has fainted away! Bring some water.” செல்லம் சமையலறைக்கு ஓடினாள்.

ஆனால் ஸ்ேதுவுக்கு உள் ப்ரக்ஞை மாறவில்லை. ஆம் இது ஒரு ஆச்சரியமில்லை. தந்தியை இத்தனை நாள் தாங்கிக்கொண்டிருந்தது ஒரு பக்கமிருக்கட்டும். முதலில் மறைத்துவிட வேண்டும் என்று தோன்றியதற்கே காரணம் என்ன?

அது அந்தக் குலராமனுக்குத்தான் வெளிச்சம், மேகங் களைப் பிளந்துகொண்டு சூரியன் கிளம்புவது போல் இத்தனை நாள் அப்பா மேல் பாஷாணம் பாலாய் மாறும் இன்பப் பயங்கரத்தில் அப்பாவைத் தரிசிக்கையில், அவர் வெறும் ராமப்ரஸ்ாதாக இல்லை தான் நினைக்காவிடினும் பரம்பரை, தன் அகண்ட கருணையில் வழங்கிய ராமப்ரலாத மாகவே தெரிந்தார்.

அப்பா, உங்களை நான் முத்தமிடலாமா?