பக்கம்:உத்திராயணம்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலி

மலைகள் நடுநடுங்கும் கானல்,

தோட்டத்தில் வாழையும் கத்தாழையும் உச்சி வெய்யி வில் தனிப் பச்சை விட்டன.

வடக்கே பார்த்த வாசல் வீடு ரொட்டி அடுப்பாய் வெந்தது. ஆனால் கொல்லை ரேழி மட்டும் ஊட்டியோடு உறவாடிற்று. கொல்லை ரேழி மாமியாருக்கு மானியம். மதியம் அங்கு கட்டையை நீட்டிவிடுவார். நீட்டியாச்சு.

துரளிக் கயிறை பங்கா மாதிரி யிழுத்துக்கொண்டு சிவகாமி கடத்தில் புழுங்கினாள். மின்விசிறி கூடத்தில் அனலைக் கடை ந்தது.

அறையில், அனந்து, அண்டை வீட்டு, பின் வீட்டுக் குட்டிகள் துரங்கவொட்டாமல் ஏதோ கொட்டமடித்துக் கொண்டிருந்தன. அதுகளுக்கு வேளை கிடையாது. போது கிடையாது. எப்பவும் இங்கேதான் குடி, இவன் அங்கே தொலையட்டுமே! மாட்டான் துஷ்டத்தனம் சொல்லுபடி போகல்லே அத்தோடு அனந்து ஒரு ராஸ்க்ரீடை மன்னன். எப்பவும் பொட்டைக்குட்டிகள்தான் அவனைச் சுற்றி. ஒன்றிரண்டு தாவணிகள் கூட. இந்த வயசுக்கே இப்படின்னா வயசுக்கு என்ன வம்பை இழுத்துண்டு வருவானோ?