பக்கம்:உத்திராயணம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலி 星45

அனந்து பொண்ணாய்ப் பிறந்திருந்தால் ஒரு எச்சி லாவது ஆடும். கன்னிப்பொண்ணுக்குத் தோஷமில்லேன்னு உலை நீருக்கு அடுப்பில் மடி ஜலம் ஏற்றச் சொல்லலாம். பொண்ணகப் பிறந்துடுத்துன்னு தனிக் கவலைப்படற நான் தான் போயிடுத்தே! அதுகளும் படிக்கிறதுகள், உத்யோகம் பண்றதுகள், கல்யாணத்துக்குச் சேர்த்து வெச்சுக்கறதுகள்: உத்யோகத்தோடே புக்ககத்துக்குப் போய்ச் சேர்ந் துடறதுகள்

அனந்துக்கு எட்டு வருஷத்துக்குப்பின் துளியில் தூக்க ணாங்குருவி-துரங்காத குருவிதான்-அதுவும் குஞ்சு மிள காய்தா ன வ யத்தில் ஒண்னு புரள்றது, ஈசுவர சித்தம் எப்படியோ? எப்படாப்பா கயளப்போறதுன்னு இருக்கு, ஆனிக்கு மாசம், அப்பவும் அயட்டல்தான்; சிவாமி மு ைஇ னாள் பல வேதனை.

ரேழியில், உண்ட மயக்கத்தில், பனி உடம்பின் அசதி யில் ப டடிக்குக் கண் செருகிற்று.

இன்னிக்குக் காங்கை, கூடத்தான் ஒத்துக்கறேன். நிறை கர்ப்பிணிதான் ஒத்துக்கறேன். அதுக்காக இப்படி ஒரு முக்கலா? முக்கவே தனியா ஆள் போடலாம் போல இருக்கே! நாங்கள் எல்லாம் சுமந்ததில்லையா? இந்த வெயிலுக்கே இப்படி விண்டுபோறாளே, ஒரு டில்லி, ஒரு இந்து ர் ஒரு ஜப்பல்பூருக்கு இவள் என்ன ஜவாப் சொல்லு வாள்? எல்லாம் தஹிக்கிற வெய்யில்தான். ஸ்கிக்காத குளிர் தான். ஒரே அநாசாரம், அசுத்தம்தான். எல்லாரும் எல்லாத்தையும் எச்சில் பண்ணிக் குடிக்கிற இடம்தான். இது நடுவுலே வளைய வரணும், வளைய வந்தாச்சு.

தொப்'பென்று தொப்டைமேல் யாரோ விழுந்ததும் வெடுக்கென விழித்துக்கொண்ட அந்த அதிர்ச்சியில் நினைவு கள் கொண்டு போய்விட்ட அரை மயக்கத்தில், திடீரெனத்

C ۹ سس سایه