பக்கம்:உத்திராயணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾45 லா, ச. ராமாமிருதம்

தன்னைச் சூழ்ந்துகொண்ட சிரிப்பின் கொந்தளிப்பு ஆர வாரத்தில் யாரிலிருந்து யார் என்று பிரிக்க முடியவில்லை. கண் சதை வளர்ந்ததால் கண் மங்கலில், கானல் வெய்யிலில் ரேழியின் குளுமையான இருட்டில்-தளர வாரிய வங்கிக் கூந்தல் நடுவகிடின்கீழ், ஸ்படிகம் போன்ற நெற்றி மத்தியில் பச்சை ஜிகினாப் பொட்டு, பச்சைப் பட்டுத் தாவணி, பச்சை ரவிக்கை, பச்சைப் பட்டுப் பாவாடை

அவளின்று வெளிப்பட்ட வீறலில், குழந்தைகள் அரண்டு விட்டன. - .

விஷயம் புரியாமல் எதிர் அலறல் கொடுத்துக்கொண்டு சிவகாமி உடல் குலுங்க ஓடிவந்தாள் எல்லாரும் பாட்டி யைச் சூழ்ந்துகொண்டனர்.

என்னம்மா? என்னம்மா?' '

கமலீ கமலி!!’ பாட்டி அலறினாள்.

கமலியா? .

திகைத்துப்போய் சிவாமி திரும்பிப் பார்த்தாள். அனந்துக்குப் பெண் வேஷம் போட்டிருந்தது. அவளுடைய சவுரி பாழ். ஆனால் பயல் பெண்ணாகவே மாறிவிட்டான். பெண் இவ்வளவு அழகாயிருப்பாளோ, சந்தேகம்தான். பக்கத்தாத்து பாரதி, பின்னாத்து சித்ரா, எதிர்விட்டு ஜாய்ஸ் எல்லாரும் சேர்ந்து பண்ணியிருக்கும் அலங்காரம். சின்னதா, ஒரே சைலா மொட்டு மாதிரி இரண்டு கொட் டாங்கச்சிகூட இதுகளுக்கு எங்கே கிடைச்சுதோ? துஷ்டை கள் துஷ்டைகள்.

விசுவரூபமெடுத்தாற்போல், பாட்டிக்கு உருவமே பெரிதாகிவிட்டாற்போல் ஒரு ப்ரமை தட்டிற்று பயமா யிருந்தது. முகத்தில் குங்குமம் கொதித்தது. கன்னங்கள் வெடித்துவிடும்போல் புடைத்துவிட்டன. விழிகள் ஏற் கெனவே பெரிசு. சற்று புலிக்கண்-இப்போ மேடிட்டு திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/156&oldid=544244" இலிருந்து மீள்விக்கப்பட்டது