பக்கம்:உத்திராயணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩要部 லா. ச. ராமாமிருதம்

இதென்ன க்ராஸ்-வக்கீல் மாதிரி? எல்லாத்துக்கும் உனக்குக் கணக்கு ஒப்பிச்சாகனுமோ?

சரி, பாட்டிக்கு உடல் தன் நிலை திரும்பியாச்சுக்கு வேறு ருசு வேண்டாம். கூஜாவில் தீர்த்தம் தலைமாட்டில் வைத்துவிட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு, சுவாமி கூடத்துக்குப் போய்விட்டாள்.

எங்கோ ஒரு நாயின் குரைப்பு. இந்த வேளைக்குத் தூக்கம் ஒரு சொர்க்கம். ஆனால் பாட்டிக்குத் துக்கம் கலைந்துவிட்டது. முனகி முனகிம் புரண்டாள்.

நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?'

நிச்சயமாக் கண்டிருக்கிறேன்.'

எனக்குக் காட்டுவீர்களா?' ' கண்டிப்பாய்க் காண்பிக்கிறேன்." (ஏதோ போற வழிக்குப் புண்ணியம் தேட நானும் ஒண்ணு ரெண்டு ஏதேனும் படிக்கறேனே!)

மஹான்கள் வழிக்கு நாம் போக வேண்டாம். நம் சந்தேகங்கள், கசடுகள் நம்மோடேயே இருக்கட்டும். இருந் தாலும்

ஒரு வானத்தின் நீலத்தில் அவள் நிறம்,

வாழையிலையின் பச்சையில், காற்றின் இலைப்பாளத் இன் அசைவில் அவள் பாவாடைக் கொசுவம், பஞ்சவர்ணக் கிளியின் சிறகில் அவள் ரவிக்கையின் கலர்.

மழையிருட்டில் அவள் கூந்தலின் கருமை. மேகத்தின் கனத்தில் அவள் கூந்தலின் அலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/158&oldid=544246" இலிருந்து மீள்விக்கப்பட்டது