பக்கம்:உத்திராயணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலி 瑾9

- இதுபோல் அம்சம் அம்சமாய் அல்லது உபமானமாய் அவரவர் மனப்பக்குவத்துக்கேற்றபடி அவள் சிருஷ்டியின் அழகில் அவளுடைய மட்டிலாத பெருமையின் தன்மையை ஒருவாறு அனுமானித்துக் கொள்ளலாமோ என்னவோ (இந்தச் சமயத்தில் இந்தப் பாஷைகூட என்னுடைய தில்லை)-வானவில்லை இந்திர தனுஸ் என்கலியா, அது மாதிரி-ஆனால் நேருக்கு நேர், அந்தப் பூரண ஸ்வரூபத்தை நேருக்கு நேர் என்னிக்கேனும், எந்த ஜன்மத்திலேனும் கூடத் தரிசிப்பது சாத்தியமோ? முதலில் அதுபோல் ஒரு பூரணமே இருக்கோ? ஒண்னுமில்லே. கோவிலுக்குப் போகும்போதெல்லாம் காணும் மூலவிக்ரஹத்தை, வீட்டில் தினப்படி ஸ்தோத்திரத்தைச் சொல்லிண்டே, மனசில் கூட்டி மனக்கண் முன் எழுப்பப் பார்த்தாலே கிடைக்க மாட்டேன்கிறது. அதென்னவோடி அம்மா... எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கு.

சத்யம் கடைசியில் ஜயிக்கலாம். ஆனால் சந்தேகத்துக்குத் தான் பலர் ஜாஸ்தி. ஆனால் கமலியை நினைக்கறப்போ, துளிக்கூடச் சந்தேகமேயில்லை. இதோ வயிற்றுக்குலையிலிருந்து அன்னிக்குக் கடைசியாக் கண்டபடி அப்படியே எழறாள்.

அன்னிக்கென்ன? வெள்ளிக்கிழமை. அந்தி வேளைக்குக் இத்துவிளக்கை ஏத்திட்டு விளக்கு முகப்புக்குச் சூட்ட ரெண்டு மல்லி பறிச்சுண்டு வரேனம்மான்னு புழைக்கடைப் பக்கம் போனவள்தான்!

இப்போ அவளுக்கென்ன வயசிருக்கும்? சாமாவுக்கு இப்போ 32 ஆறது. அத்தோடு அஞ்சைக் கூட்டிக்கோ காணாமல் போனப்போ வயசு 17. அப்படின்னா ஐயோடி கமலி இப்போ நீயே பேரன் பேத்தி எடுத்திருப்பாயே! அன்னிக்குப் பார்த்தபடியே அழியா மேனிக்கு மனசு நினைச் சுண்டிருந்தால் அது உன் தப்பா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/159&oldid=544247" இலிருந்து மீள்விக்கப்பட்டது