பக்கம்:உத்திராயணம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலி I5 型

மச்சம், நீ சிரிக்கறப்போ, உசிர் கண்டு அசையற அழகே தனியாச்சே! உன்னை நாங்கள் எப்படிச் சந்தேகப்படு GSAJ frið?

  • மாமி, நான் சொல்றேனேன்னு நினைக்காதேங்கோ. இது ஏதோ ப்ளானாத்தான் நடந்திருக்கு. இ ல்லாட்டா நீங்க சொன்னதை வெச்சுண்டே, ஒண்னு கேக்கறேன். அன்னிக்குன்னு உங்கள் பொண் அவளுடைய நகை அத்தனையும் பூட்டிக்க வேண்டிய அவசியம் என்ன?-கால் கொலுசு உட்பட."

-அட ராமா, ஒரு வெள்ளிக்கிழமை குழந்தை அலங் காரம் பண்ணிக்க ஆசைப்படப்படாதா? அதுவே ஒரு குத்தமா ஆயிடனுமா?

எல்லாம் போறாத வேளை. புத்தி தெளிஞ்சா தானா கழுதை வந்து சேர்றது விட்டுத் தள்ளுங்கோ. நாம் கவலைப் பட்டுத்தான் என்ன பிரயோசனம்?’’

"அடி கமலி, வயிறு கொதிக்கறது.டீ, நீ போனது கூடப் பெரிசாயில்லேடி. என்னிடத்திலேயே என் குழந்தையைத் திட்ட, நான் எதிர் பேச முடியாமல் கேட்டுண்டிருக்க இடம் கொடுத்துப் போச்சே, அது தாங்கல்லேடி!

உங்கள் பெண் கட்டாயம், இன்னிக்குப் பதினஞ்சாம் நாள் எந்த வழியாப் போனாளோ, அந்த வழியாவே, அதே வேளையில் திரும்பிடுவா. எனக்கு சோழி சொல்றது."

அங்கே பார்த்தேன்; இங்கே பார்த்தேன்; அவ னோடு பார்த்தேன்; இவனோடு பார்த்தேன்.”

'துரத்தான் பார்த்தேன். உங்கள் பொண்ணுதானா தெரியாது. ஆனால் நிச்சயமாப் பார்த்தேன்."