பக்கம்:உத்திராயணம்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள் 155

புரண்டது. அவள் பாராட்டாத பலங்களில் அவள் கூந்தல் ஒன்று. அவள் எவ்வளவோ விஷயங்கள் பாராட்டுவ தில்லை. தனக்கு ஒரு பெரும் அழகு உண்டு என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அதைப் பேணுவ தில்லை. அவள் பி. ஏ. லிட்... ஃபஸ்ட் க்ளாஸ். ஆனால் பிடிவாதமாகத் தமிழிலேயேதான் பேசுவாள். கலியானத் துக்கு முன் ஏ.ஜி. ஆபீஸில் உத்யோகம் பார்த்துக்கொண் டிருந்தாள். இந்தக் காலத்தில் பெண் பார்க்கும் உத்யோ கமும் அவள் கலியாணச் சீரில் ஒன்றாச்சே!

ஆனால், திருமணம் ஆனதும், வெங்கட் அவள் வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டான்.

'புருஷன் கொண்டு வந்து போடுவதில் குடித்தனம் பண்ணி, வீட்டை ஒழுங்காக வைத்துக்கொண்டால் போதும்.'"

நீங்கள் ஆபீஸர் ஆனாலும், நான் மாஸ்ம் ரூ. 600 வீட்டுக்குக் கொண்டு வந்தால், இந்த விலைவாசி நாளில் கசக்குமா? எனக்கு ஒரு பெளடர், ஸ்னோ, விகோடர்மரிக்குக்கு உ ங் க ளி ட ம் கை நீட்டிக்கொண்டு நிற்கணுமா?' என்றெல்லாம் அம்புஜம் வாதாடவில்லை.

நீங்கள் சொல்றபடியே."

அதிலெல்லாம் அவளுக்கு ஆசையில்லை. அவள் முகத்தில் ஒரு மாசு மறு கிடையாது. கில்ட் அணியமாட் டாள். இருந்தால் அசல், அயன், கிடைக்காவிட்டால் போலி வேண்டாம் மொழு மொழுவென்று வெறுங்கைகளே, அவளுக்கு அழகாயிருக்கும்.

வெங்கட் லக்கி ஃபெலோ.

குழந்தைகள் சுருக்கவே வந்துவிட்டன.

மாரு தி. (அவன் பெயர் அல்ல.)