பக்கம்:உத்திராயணம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互 53 லா ச. ராமாமிருதம்

விளையாட வரையா இல்லே? அவ்வளவுதான், சண்டை) வெங்கட் ஸ்கூட்டரில் இபிசுக்குக் கிளம்பும் சமயத்தில் திடீ ரென்று காற்று இறங்கியிருக்கும், அல்லது ஏதேனும் ஒரு முக்யமான பாகத்தைப் பிடுங்கிவிட்டிருக்கும். அடி, உதைசிணுங்கினால்தானே!

கொடுப்பதுபோலவே, வெளியிலிருந்து வாங் கி க் கொண்டும் வருவான் நெற்றிப் பொட்டில் ர த் த ம் ஒழுகும். அதையே அவன் உணர்ந்தானோ இல்லையோ?

அப்புறம் அந்த உடம்பில் அசாத்திய பலம். மிருக பலம். ஆசையோடு ஓடிவந்து கட்டிக்கொண்டாலும் சரி, ஆத்திரத்தில் தலையால் வயிற்றில் முட்டினாலும் சரி. இம்புஜத்துக்குக் குலை நடுங்கும். காரோ ரயிலோ மோதி னால் இப்படித்தானோ?

மூத்தது பற்றி இவ்வளவு சொன்னபின் பூரீதரைப் பற்றித் தனி ஆவர்த்தனம் தேவையில்லை. அத்தனையும் தவிர, ஒன்றிரண்டு, அம்சங்கள் கூடயிருக்குமே தவிர குறையாது.

இவர்களின் பயங்கர சுறுசுறுப்பு தாங்க முடியாமல் டாக்டரிடம் யோசனை கேட்கும் அளவுக்குக் கொண்டு போய்விட்டது. வெங்கட்’கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது.

டாக்டர் புன்னகை புரிந்தவர், மாதத்துக்கு முன்னா லேயே பிறந்துவிட்ட கேஸ்களிலேயே இது ஒரு பிராப்ளம். ஹைபர் சென்சிடிவிடி டோன்ட் ஒர்ரி. நாளாவட்டத்தில் சரியாய்ப் போய்விடும்.’’

நாளாவட்டத்தில் என்றால் எப்போ டாக்டர்?’’ அம்புஜத்துக்குக் கண் துளும்பிற்று. தொட்டதற்கெல் லாம் கண்ணிர் உகுக்கும் ஆசாமி அல்லள் அவள்.