பக்கம்:உத்திராயணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷笛酸 லா, ச. ராமாமிருதம்

அதைவிட ஆச்சரியம், இந்தப் பூகம்பத்தில் நீ எப்படிப் படிக்கிறாய்?"

புன்னகை புரிந்தாள். நீங்களேதான் பார்த்துண் டிருக்கேளே! நான் என்ன பண்ண முடியறது? இவர் களாலேயே, ஒரு சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, கச்சேரி-சங்கீதம் என்றால் எனக்கு உயிர்-எல்லாத்தையும் மறந்தாச்சு. முகமாற்றமாய் பக்கத்து வீட்டுக்குப் போய் ரெண்டு நிமிஷம் பேசலாமா என்கிற ஆசையோடு சரி. அதற்குள் வீடு என்ன ஆகிறதோ என்று அடிவயிற்றில் நெருப்பு. காஸைப் பிடுங்கிவிட்டார்களோ? எந்த பிளக்கில் கை வைக்கிறான்களோ? அண்டை வீட்டுக்காரர்கள் இங்கே வரமாட்டேன்கிறார்கள். என் பிறந்த வீட்டார் அஞ்சு கிறார்கள். அம்மாவுக்கு ஹை பிளட்பிரஷர்-தெருவிலேயே இவர்களைக் கண்டால் ஒரு அச்சம். பாவம் அப்புஜ மாமி அவ்வளவு நல்லவள்!" என்று அவர்கள் அங்கலாய்க்கை யிலேயே எனக்கு எரிச்சல் வரது. ’’

ஆழ்ந்த யோசனையுடன் தனக்கே பையன்கள் ஆஷ் டைகள் என்பதால் நம் கசப்பை அவர்களிடம் காட்டலாமா? எல்லாரும் கரித்தும் பெத்தவாளும் கரித்தால் அதுகள் என்னத்துக்குத்தான் ஆறது? அதுகளுக்கும் நாம் நல்ல ஸ்டார்ட் கொடுக்கணும். '

மாருதியையும் gதரையும் சேர்த்த பள்ளிக்கூடம் வட்டாரத்திலேயே, ஏன் பட்டினத்திலேயே பேர் போனது. இடம் கிடைத்ததே பெரிசு. சம்பளம் ரிக்ஷா, அவ்வப்போது அங்கே எக்ஸ்கர்ஷன், இங்கே கேம்ப், இந்த சேரிட்டி அந்த

+ క్యా Kr אי - * * જ બ્ર GLIGణఐ 75p சராசரி இருவருக்கும் சேர்த்து மாதம் ஒரு பச்சை நோட்டு எகிறிற்று. இதனாலேயே சொல் இடி வேறு: அவளுக்கென்னடி...”*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/170&oldid=544258" இலிருந்து மீள்விக்கப்பட்டது