பக்கம்:உத்திராயணம்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள் 161

பஸ்ஸை விட்டு இறங்கினதும் பையனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்தாள். பையனுக்கு இவ்வளவு எலும்புக்கனமா? அவனை அதிகமாகத் தூக்கின. தில்லை. பள்ளியை அடைந்து மாடியேறி எச். எம் அறை யைச் சேர்வதற்குள் மூச்சு சிவிர்த்து முகம் முத்திட்டு, நெற்றியில் இரண்டு பிரிகலைந்து அலைய ஆரம்பித்து விட்டன.

ஆ! தட்பாய்-கம் இன்-இல்லை. என்னோடு வாங்க-ஐ வில் ஷோ யு ஃபர்ஸ்ட் எச். எம். வாட்டசாட்டம். நடையும் ராணுவ ஆணவ நடை, நரேஷைத் துக்கிக்கொண்டு பாதி ஒட்டம். பாதி நடையாகப் பின்தொடர்வதே பெரும் பாடாயிருந்தது. -

நேரே எச். எம். குழந்தைகளின் பாத்ருமுக்குச் சென்று வாஷ்பேஸினைக் காட்டினார்: மின்னல்போல் ஒரு விரிசல் ஒடிற்று.

உங்கள் பையன் கல் எங்கிருந்து எடுத்து வந்தான்? எப்படி உடைக்க முடிஞ்சது? இன்னும் திகைப்பாயிருக்கு. அவன்தான்; சந்தேகமே வேணாம். கையும் பிடியுமா அகப் பட்டுக்கிட்டான். நேற்று நடந்தது. உங்களிடம் ஏதேனும் சொன்னானா?”

அம்புஜம் இல்லையென்று தலையை ஆட்டினாள்.

அவன் எங்கே சொல்லப் போறான்? அவனுக்கு முக்ய மாக்கூடப் பட்டிருக்காது. துளிக்கூட பயமே கிடையாது."

எச். எம். ஏதோ சொல்லிக்கொண்டே முன் நடக்க அம்புஜம் இடுப்பில் நரேஷ்டன் பின்தொடர்ந்தாள். அவள் மனம் தீவிரமாக ஒரு மனக்கணக்கை முடைந்து கொண்டிருந்தது.

i : -سسسه سع