பக்கம்:உத்திராயணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63 லா. ச. ராமாமிருதம்

குறைஞ்சது 350 இருக்கும். அவரைச் செக் வெட்டச் சொன்னால், கணக்கில் இடங்கொடுக்கிறதோ இல்லையோ? முதலில் சொல்லியாகணும். இன்னிக்குக் குழந்தை பலி தான், பயம்மாயிருக்கு. ஒரு வளையலை வெச்சால் போதுமா? மோதிரமும் வெக்கணுமா? அதுக்கும் எனக்குப் பழக்கமில்லையே! அவர்தானே செய்யனும் அவரிடம் எதையும் சொல்லாமல் இதுவரை இருந்ததில்லை. சொல் லாமல் இருக்கமாட்டேன். ஆனால் எப்படி?

எச். எம். தன் அறையை அடைந்ததும் பூரீதரை அழைத்து வர ப்யூனை அனுப்பினாள்.

பாய்ஸ் வில் பி பாய்ஸ். வி. நோ. அவங்களுக்கே ஒரு நாசபுத்தி உண்டு. அதுவும் தெரியும். முக்கால்வாசி பெற் றோர்கள் வீட்டில் தொந்தரவு பொறுக்காமல் எங்கேச் சானும் அடைச்சுவெக்கத்தான் பையன்களைப் பள்ளிக்கு அனுப்புறாங்க. இதுக்காகவே நாங்கள் எங்கள் ரேட், டிஸிப்ளின் நிபந்தனைகள் எல்லாம் ஸ்டிரிக்டா வெச்சிருக் கோம். பசங்களின் சேட்டைக்கும் நாங்கள் ஒரு மார்ஜின் தர்ரோம். ஆனால் அப்படியும் அதையும் மீறி-ஆ1 பையன் இதோ வந்திருக்கான்'

எதிர்பாராமல் அம்மாவைப் பார்த்ததும் பூரீதர் முகத்தில் ஆச்சரியம், சந்தோஷம், அப்புறம் ஒரு பயம்இந்தக் கலவையில் உருவாய ஒரு ப்ரக்ஞை எல்லாம் சேர்ந்து முகம் தனி அழகிட்டது. அம்புஜத்துக்கு அவனை அப்படியே அணைத்துக்கொள்ள மனம் தவித்தது. துஷ்டை துஷ்டை யென்று கரிக்கிறோமே. குழந்தைகள் எவ்வளவு நிஷ்களங்க மானவர்கள்! பெற்றோர்கள் நாம் நம் சுயநலத்தில் திடீ ரென்று அவர்களைப் பிறவியில் தூக்கியெறிந்துவிட்டு, அதுகள் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் மேலே கல்லை விட்டும் எறிகிறோம். கொடுமை நாமா? அவர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/172&oldid=544260" இலிருந்து மீள்விக்கப்பட்டது