பக்கம்:உத்திராயணம்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள் I 63

எச். எம். என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்?

எங்களுடைய சட்ட விதிப்படி, இந்த சொத்தழிப் புக்கும் உங்கள் பையனை வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம்-’’

அம்புஜத்துக்கு வயிற்றைக் கலக்கிற்று. பிள்ளையாரே! உண்டியிலே கால்ரூபா போடறேன்

ஆனால் அதில் ஒரு சிக்கல்-’’

பிள்ளையார் சக்தி வாய்ந்தவர்தான்.

மூணாவது வகுப்புலே ஒரு பையன் இருக்கான். உங்கள் பையனை இப்பிடியே விட்டுவெச்சா, இவனுடைய' விசுவரூபம் எப்படியிருக்கும் அதுதான் அவன். அவனைக் கண்டால் க்ளாஸே நடுங்குது. ஸ்டுடண்ட்ஸ், டீச்சர் எல்லா ரையும் ஒரு டென்ஷன்லேயே வெச்சு அந்த டென்ஷன் நடு வுலேதான் இருக்கறதுதான் அவனுக்குச் சரியாயிருக்கு. வேறு மாதிரியாவே அவனால் இருக்க முடியல்லே. அவனை என்ன செய்யறதுன்னு தெரியாமலே முழிச்சுக்கிட்டுருக்கோம். முதல்லே அவன் மேலே ஒழுங்குமுறையா ஆக்ஷன் எடுத் துட்டுன்னா உங்கள் பையன்மேல் நடவடிக்கை டிசைட் பண்ண முடியும்? ஆமாம் இந்தப் பெற்றோர்கள் எல்லாம் என்ன செய்யறாங்க? பெத்துட்டு, பட்சி மாதிரி பறக்க விட்டுடறாங்களா?' '

அம்புஜம் ஆச்சர்யமுற்றாள்.

அப்படி என் பையனையும்விட ஒரு வால் இருக்கானா என்ன?"

எச். எம். எழுந்தாள். கம் வித் மி!'

பூரீதரும் தொடர்ந்தான்,

வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தது. அவர்களைக் கண்டதும் ஒசை சட்டென அடங்கிற்று.