பக்கம்:உத்திராயணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌64 லா. ச. ராமாமிருதம்

எச். எம். கணிரென்று:

கார்த்திகேயன்: ஸ்டாண்ட் அப்!” மாருதி ஒரு தினுசாய், மனமில்லாமல் அலட்சியமாய், கம்பீரமாய், மெதுவாக எழுந்து நின்றான். கூட்டிலடைத்த விலங்குபோல் குமுறும் சீற்றம் அவன் கண்களில் சிந்திற்று.

அவனைக் கண்டதும் தாயின் கண்கள் கனிந்தன.

இவன் என் பையன்தான்

வாட்?" எச். எம். கைமறதியாக எடுத்து வந்துவிட்ட பேப்பர் வெய்ட் விழுந்து தரையில் உருண்டது.

எஸ் லுக்'-அம்புஜம் நரேஷை இடுப்பிலிருந்து இறக்கி கணக் கென்று கீழே நிறுத்தினாள். நரேஷ் வாயில் விரலைச் சப்பிக்கொண்டு நின்றான்.

அதோ அவன்- மாருதியைக் காட்டி, "இதோ இவன். பூரீதரைக் காட்டி இவங்க இங்கேதான் முழுக்க படிச்சி முடிக்கப் போறான்கள். அடுத்த வருஷம் அதோ இவனையும்’-நரேஷை முதுகில் தட்டி... இங்கேதான் சேர்க்கப் போறேன். ' .

எச். எம். முகத்தை இரு கைகளிலும் பிடித்துக்கொண் டாள். அவளுக்குக் கன்னங்கள் கதுப்பாயின. அவளுடைய பி, எ, பி. டி. , எம்.பில், இதுவரை தோரணை, பேச்சில் த்வனித்த ஆணவம் எல்லாம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போயின.

ஏன் மாமி, நீங்கள் பிள்ளையாண்டிருக்கேளா?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/174&oldid=544262" இலிருந்து மீள்விக்கப்பட்டது