பக்கம்:உத்திராயணம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடைபெற நில்குருக்கள் திடுதிப்பென ஆரம்பித்தார்:“அதோ அந்த வீட்டைப் பார்த்தியா?”

பார்த்தேன். அவர் சுட்டிக் காண்பித்த பக்கம் ஒரே வயற்காடு. ஒட்டி ஏரிக்கரை. கரைமேட்டில் காவல் காக்கும் பனைகள், பனங்குலை களுக்குக் காவல் யார்? வான விளிம்பில் சாயும் வெய்யிலில் அதற்கு மப்பால், ஆற்று மணல் மின்னிற்று.ஒன்றிரண்டு பம்பு செட்டுகள்'ஜக் ஜக் ஜக்' ஒட்டுக் கேட்டால் சத்தம் எட்டும்.ஆனால் வீடு? ஏதும் காணோம்.

“அதாண்டா! அதோ அந்த மூணு மெத்தை வீடு! மெத்தை வீடு தெரியல்லே! என்னடா கண் அது? கண்ணுக்கு வேறே கண்! மெத்தை வீடு தெரியாமல் நேற்றுப் பையன் முளிக்கறியே!”

இருந்தாலல்லோ தெரியும்? ஆனால் நான் மறுத்துப் பேசவில்லை, தெரிந்ததைப்போல் தலையைப் பலமாக ஆட்டினேன். நேற்றைப் பையனுக்கு நடப்பது அறுபத்தி நாலு. ஆனால் நாலு வருடங்களாக குருக்களுக்கு அவர் வாயாலேயே தொண்ணூறு. அவரை மறுக்க எனக்குக் கட்டுபடி ஆகாது. கண்ணாடிக் குருக்கள் கதைச் சுரங்கம். ஒரு பக்கம் கயிறு கட்டி காதில் சுற்றிச் சரிந்த கண்ணாடியில் ஒரு ஃப்ரேம் ஓட்டை, எனக்குத் தெரிந்து பதினைந்து வருடங்களாக வீம்பாக இதே அலங்காரம்தான். ஒருமுறை கண்ணாடியை