பக்கம்:உத்திராயணம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுவிடைபெற நில் 19மாற்றித் தர ஜாடையாக முன் வந்து வாங்கிக் கட்டிக்கொண்டேன். அப்புறம் அந்த வழிக்குப் போவதில்லை. ஆனால் இல்லாததைப் பார்ப்பவருக்குக் கண்ணாடி எதற்கு? ஆனால் கண்ணாடியை மாட்டிக் கொள்ளா விட்டால் திண்டாடுவார்.

“என்ன ஒப்புக்குத் தலையாட்டறே?” அட போடா மண்டு! உடனே பதறிப்போய், “ராமாமிருதம், ராமாமிருதம், என்னை மன்னிச்சுடு பழைய நினைப்பில் ஏதோ உளறிட்டேன்.மன்னிச்சிடப்பா, வயஸாச்சு. மனசு ஒரு நினைப்பில் இல்லே!”

“மாமா, நான் பழைய ராமாமிருதம்தான்!”

“அதெப்படி?நல்ல உத்தியோகம் பார்த்திருக்கே!எவ்வளவு படிச்சிருப் பே? உலகத்தை எத்தனை சுத்திப் பாத்திருப்பே! பழைய ஞாபகத்தை வெச்சிண்டு எங்களைப் பாக்க வரதே பெரிசு! கதை கிதை வேறே எழுதறியாம்! எங்களுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? எனக்குக் கண் போச்சு. எனக்குப் பகல் ராத்திரி ரெண்டும் ராத்திரிதான். சங்கரன் படிச்சுக் காண்பிச்சால் உண்டு .உன்னைவிட அவன் நாலு வயது கூடுதல் இல்லே? நீ நளா அவன்-' விரல்கணுக்களில் எண்ணி ஏதோ ஒரு பேர் சொன்னார் எனக்கு மறந்துபோச்சு.

“ நீ அவன்கிட்ட சொல்லாதே!”

“என்னத்தை மாமா”

“உன்னை ஏகவசனமா பேசினதை எனக்கு வார்த்தை பிரண்டு-போனதை.” எழுந்து சாஷ்டாங்கமாக மாமா காலில் விழுந்தேன்.

'தீர்க்காயுஷ்மான்பவா!' குருக்கள் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தார். அவர் விரல் நுனிகளில் அன்பு சொட்டிற்று. குருக்களுக்கு உள்ளூர சந்தோஷம்.