பக்கம்:உத்திராயணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைபெற நில் 23.

நான் போட்டுண்டதில்லியே!”

'Nower mind’ அட! குருக்கள் இஷ்டப்பட்டால் பல்லவி யில்...என்னென்ன அடங்குமோ? கோவில் குளத்தின் மேல் (குட்டை அந்த நாளிலேயே வருடத்துக்கு ஆறு மாதம் வறட்சி. மழுங்கப் பெருக்கி நெல் உலர்த்தி என் பையன் பருவத்தில் நானே பார்த்திருக்கிறேன்.) ஒரு மீன் கொத்தி அந்தரத்தில் அதே நிலையில் பாதம் மாற்றி மாற்றி நர்த்தன மாடிற்று அதற்குமேல் ஒரு பருந்து நீந்திற்று. பின்னணி யில் மேகப் பொதிகள் கம்பீரமாகச் சாய்ந்தன.

"இந்த தந்து யார் தெரியறதா? தெரியல்லே? ஒர்ஜினல் கூனப்ப முதலியின் கொள்ளுப் பேரன்'

ஒரிஜினல் கூனப்பன் யார்?'

  • இப்பத்தானே காட்டினேன். அதுக்குள்ளே மறந் துட்டியே. இப்போ காட்டின திசை வேறு. ஆனால் அதுவும் மேற்படிதான். அதோ! அதோ!-’

மூன்றாவது அடுக்கு மொட்டை மாடியில் மூலைக்கு மூலை கட்டியிருந்த சிவப்புப் பட்டுப் புடவை காற்றில் பட படத்தது. அப்படிப் பார்த்தால்தான் குருக்களுக்கு திருப்தி: பெரியவாள் மனசைப் புண்படுத்தப்படாது.

ஆனால் அப்போ மனைதான் உண்டு. மனையில் இவன் குடிசை, கிணறுகூடக் கிடையாது. அவன் பெண் டாட்டி, வாசலுக்கு சாணி தெளிக்கக்கூட கோவில் கிணற்றில்தான் மொண்டு வரணும் என்று போவாள். அப் போல்லாம் வேலையை வேலையாப் பாவிக்கிறதில்லே. நாம் விடற மூச்சைக் கவனிச்சா விடறோம். கவனிச்சால் மூச்சு தடைபடும். திணறும். அதுபாட்டுக்கு செய்துண்டேயிருக்க வேண்டியதுதான். இப்போத்தான் தொட்டதெல்லாம் வேலை வேலைக்காரி தேச்சுப் போட்ட பாத்திரத்தை கவிழ்க்கிறது ஒரு வேலை, தோச்சிப் போட்ட காஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/33&oldid=544122" இலிருந்து மீள்விக்கப்பட்டது