பக்கம்:உத்திராயணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லா ச. ராமாமிருதம்

துணியை எடுத்து மடிக்கிறது ஒரு வேலை படுத்த படுக்கை யைச் சுருட்டறது ஒரு வேலை. எத்தனை அக்ரகங்களுக்கு கண்ணை மூடிண்டு போக வேண்டியிருக்கு தெரியுமா? அதே சமயத்தில் இன்னிக்கு டி.வி யில் மனோகரான்னு சொல்லு. குடல் தெறிக்க ஒடுங்கள். லுங்கியிலிருந்து கொசாம் வரைக்கும் நாய் தோத்தது. நாளடைவில் பல் தேய்க்கறது ஒரு வேலை, அநாகரிகம் விட்டுத் தள்ளு. மிருகங்கள் பல் தேய்க்கறதுகளா? அதுகளுக்குப் பல் வெளுப்பு கெட்டுப் போச்சா? அப்யஞ்ஞன ஸ்னானம் அவசியமான்னு ஒரு சர்ச்சையாமே! "

பேஷ் குருக்கள் ஃபார்முக்கு வந்திருக்கார்,

- எனக்குக்கூட என் அம்மா வயிற்றில் இருக்கறப்போ கனாக் கண்டமாதிரியிருக்கு, ஏதோ ஏதோ ஊமக்கோடுகள் மட்டும் லேசாய்...அப்பவே வயசான வன்தான். ஆட்டுக்குத் தாடி வளர்ந்தாப்ல மோவாய்க்கட்டையில் மயிர் பிசிர் பிசிராத் தொங்கும். பெரிய கூன். ஆமாம். அந்த நாள் தறியில் கை நாடா அப்படியும் இப்படியுமா குறுக்கே நாடாவைக் கையாலயே தள்ளிப் பாய்ச்சி ஒவ்வொரு நூலா முடைஞ்சாகனும், தறிமேல் குனிஞ்சு குனிஞ்சு ஆளுக்கு இடுப்பே வளைஞ்சுபோச்சு, குமரப்ப முதலி கூனப்ப முதலி ஆயிட்டான். கொள்ளுப்பேரனும் கூனப்ப முதலி. இவன் வெட்கப்படறான். என்ன பண்றது? பேர்ராசி விட்டுப் போகப் பயப்படறான்."

குடிசை, நாலு சுவர்.மேல் ஒலைக் கூரை, அடுக்களை யைப் பிரிக்க குறுக்கே இடுப்பளவுக்குக் குறுக்குச் சுவர். அடுக்களையில் ஒரு மூலையில் நெல் குதிர். காவி அடுப்பு குளிருக்கு அடக்கமா. ஆளே அதன்மேல் படுக்கலாம். அடுக்காய்ப் பானைகள் இத்தியாதி! இந்தப் பக்கம் தறியும் தறிக் குழியும் பாதிக்கு மேல் அடைத்தது. இதற்கிடையில் இடத்தில்தான் படுத்து பெத்து பெருகி-ஈயத்தைப் பார்த்துப் பித்தளை சிரிச்சதாம்! நான் என்ன வாழ்ந்தேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/34&oldid=544123" இலிருந்து மீள்விக்கப்பட்டது