பக்கம்:உத்திராயணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 லா, ச. ராமாமிருதம்

உலையைப் போட்டுவிட்டு, தண்ணி மொள்ளப் போயிட் டாள். பேறுகளில் ஒண்னு ரெண்டு கொடுக்காப்புளிக்காய் அடிக்கப் போயிருக்கும். ரெண்டு மூணு எங்கேனும் எருமை மாடு சவாரிக்குப் போயிருக்கும். மூணு நாலு பள்ளிக் கூடமே போயிருக்கும். நாலு , அஞ்சு எனக்குத் தலை சுத்தறது. இது என்ன கணக்கோ விடப்பா!'

வாசற்பக்கம் நிழல் தட்டிற்று. தறியிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் ஒரு பொம்மனாட்டி, முப்பத்தி அஞ்சிலிருந்து அறுபதுக்குள் இருக்கும்.'

வெடுக்கென எனக்கு முதுகு நிமிர்ந்தது. இந்த மனுஷன் என்ன குத்து மதிப்புப் போடறான்? எதிராளியைச் சதாய்க் கிறானா? யார் கேட்கிறது?

செக்கச் செவேல்ன்னு நிறம். சிவப்புப் புடவை உடுத் திண்டு, சிரிச்ச முகம்.”

  • ரொம்ப நாக்கை வரட்டுது. ' குரலில் சற்று ஆண் கலப்பு-இரட்டைத் தந்தி, செளடய்யா பிடில்.

கூனப்பன் அடுக்களைப் பக்கமாகத் தலை சாய்த்தான். தறியிலிருந்து எழுந்து வருவதற்கில்லை. இக்கட்டான கட்டம் இழை யறுந்து நுனியைத் தேடித் தவிச்சிண் டிருக்கான். கேட்டவளுக்கு அவனே தண்ணி யெடுத்து தரல்லியேன்னு யாரும் குற்றம் சொல்லமாட்டார்கள். நெசவுத் தொழில் அப்படி, பிராணாவஸ்தை. மூச்சு இழை யோடிண்டிருந்ததுன்னு வசனமே பின் எப்படி வந்தது?

ஆனால் அவள் அடுக்களைக்குள் நடந்து சென்ற விதம் வேடிக்கையாக இருந்தது. பிறகு வியப்பு. அவனுக்கு முதுகைக் காட்டாமல், அவனுக்கு நேர்முகமாக, பக்க வாட்டில் நகர்ந்துகொண்டே போய், அவன் மேல் வைத்த கண் மாறாமல், பானையிலிருந்து மொண்டு குடித்தாள். பார்வைக்கு இவ்வளவு நல்லா இருக்கா, பாவம் வலிப்பா, வாதமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/36&oldid=544125" இலிருந்து மீள்விக்கப்பட்டது