பக்கம்:உத்திராயணம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 லா, ச. ராமாமிருதம்

அழகம்மைக்கென்ன சின்னக் குரலா? வேலைப்பாடு போகவர அவளுக்குக் கத்திண்டே இருக்கணும். அவள் வந்த வளம், வாழ்க்கைப்பட்ட வழி; குடும்பத்தின் அவலம், இதற் லாம் காரணம் யார்?

குருக்கள் எழுந்து எட்டப் போய் புகையிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வந்தார்,

பெண்களுக்குக் கலியாணமான புதுசில் ஆம்படை யான் மேல் ஆசை. நாள் ஆக ஆக வெறுப்பு: இருவருக்கும் வயசு முற்ற முற்ற அவன் ஒரு வஸ்து. இப்போத்தான் திண்ணையில் உட்கார்ந் திண்டிருந்தது. எப்பவோ குளத்தங் கரைக்குப் போச்சு- செத்துப்போன பிறகு பேசுவதற்கு ஒரு விஷயம். அதிலும் அவள்தான் ஹீரோயின். அப்புறம் அதுவும் இல்லை. ஆண்டவனே! இன்னும் எத்தனை நாள் இங்கே பிடிச்சுப் போட்டிருக்கையோ?” தன்னை மறந்து கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கண் கலங்கிற்று. இடுப்புத் தவலை யில் ஜலம் தளும்ப, வைதுகொண்டே நுழைந்தாள். உலை சுண்டுதே தெரியல்லே? நான்தான் இல் லியே களைஞ்சு போட்டால் உன் மீசைக்குப் பங்கம் வந்துடுமோ?-' அடுப் பண்டை வந்ததும் அழகம்மை அலறினாள். குரல் WiBGYCR ஆக உடைந்தது.

ஐயோ வாயேன்! இங்கே வந்து பாரேன்!"

கூனப்பன் சிரமத்துடன் அவசரமாக, தறியினின்று தன்னைக் கழற்றிக்கொண்டு வந்தான். சோற்றுப்பானையில் விளிம்பு கட்டி பால் பொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சொட்டுக் கூட வழியவில்லை.

வீடு பூரா, பால் மணத்துடன், சந்தனம், புஷ்பம் கம்’ குழறிக்கொண்டே அழகம்மை வெளியே ஓடினாள்.

கூனப்பன், நெற்றிக் கொப்புளிப்பை வழித்தபடி, தற் செயலாகத் தறிப்பக்கம் திரும்பினான். தறியில் 20 நெ