பக்கம்:உத்திராயணம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைபெற நில் 3 #

கூட நடத்தியிருப்பார்கள். இப்போ பொங்கலுக்கு வெல்லமே தகறார். வெல்லம் இல்லாமல் பொங்கல் செய்வது எப்படி? இப்போ பெட்ரோலுக்கு மாத்து தேடறாங்களாமே, அத்தோடு இதையும் ஒரு விஞ்ஞான பிரச்னையாகக் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். பாரத நாடு ஆஸ்திக நாடு. பொங்கல் போட்டே ஆகணும்.

கூனப்ப முதலியின் பிள்ளைகள், பேரன்மார்கள் எல் லோரும் உட்கார்ந்து தின்று தின்று தொந்தியும் தொப்பையு மாய், குண்டப்ப முதலிகளாகி விட்டார்கள்.

ஆனால் கூனப்பன் மட்டும் சுக்கங்காயாய் வற்றி வயிறோடு முதுகு ஒட்டி

ஒருநாள் கூடத்தில் ஊஞ்சலில் படுத்திருந்தான். பிற் பகல் மணி மூன்றிருக்கும். வீட்டில் ஒருவருமில்லை. ஆனால் அது இப்போதெல்லாம் புதுசில்லை. வீட்டிலிருப்பவருக்கு (பெண்கள் உள்பட) வீட்டுக்கு வெளியேதான் ஜோவி, காலம் மாறிண்டே வரதோன்னோ?

துரக்கமல்ல: ஒரு தினுசான மயக்க சுகம் அரைக் கண் செருகல். ஒரு பொம்மனாட்டி-சிவப்புப் புடவை, சிரிச்ச முகம், வயது அறுபத்தி அஞ்சிலிருந்து முப்பதுக்குள் (ஒஹோ, இதுதான் Left Hand ஆக்கும்) எதிரே நிற்கிறாள்.

நான் போற வேளை வந்தாச்சு. சொன்னபடி உன் னிடம் சொல்லிக்கொள்ள வந்திருக்கேன்."

கூனப்பனுக்கு வெடுக்கென விழிப்பு வந்துவிட்டது. அவசரமாக எழுந்து இடுப்பில் நெகிழ்ந்திருந்த வேட்டியைச் சரியாகச் சொருகிக் கொண்டான்.

இரு, இதோ வந்துட்டேன். அவசரம்” வாத்தியா ரிடம் பையன் மாதிரி, ஒற்றை விரலைக் காட்டிவிட்டு வேத மாக வாசலுக்கு வந்து தெருவைக் கடந்து, எதிர்வீட்டுக்குள்