பக்கம்:உத்திராயணம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி

குரலோசை-இல்லை சப்தங்களின் சோதனையில் என் வாழ்க்கை அழிந்தது.

சங்கீதமல்ல-வாழ்க்கையின் தினசரி ஓசைகள்-பண்டங் கள் உருளல்-கதவுகள் திறத்தல்-எச்சிலின் துப்பல்இருளில் ஒரு தும்மல்-இம்மாதிரி சப்தங்கள் என் வாழ்க் கையை அப்போதைக்கப்போது, அவைகளின் இஷ்ட உரு வாக்கி என்னைக் குட்டிச்சுவராக்கிவிட்டன.

கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதி லன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க அவ்வழியே கற்பனையையும் ஒட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்த வேதி சமாசாரம்தான். அவன், புனலில் அமிழும் குடத்தை புலியின் தாகமெனத் தப்பாக ஆர்த்தம் பண்ணி அழிந்தான் நான் சரியாக அர்த்தம் பண்ணி அழி கிறேன். இதுதான் வித்தியாசம். இறுதியில் இருவரும்

கண்ட பலன் ஒன்றுதான்.

சப்தங்களின் அர்த்தம் என் மனதில் முதன்முதலில் உறைத்த பொழுது எனக்கு ஒன்றும் பிரமாதமாய் வயதாகி விடவில்லை. பதிமூன்று, பதினாலு இருக்கும். இரண்டுங் கெட்டான் வயது. ஒரு நாளிரவு எல்லோரும் சாப்பாடாதி, படுக்கையுமாகி, விளக்கை அனைத்துவிட்டு, தூக்கம்