பக்கம்:உத்திராயணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்தி வேதி 3?

கேட்டதால் வந்த விபத்தோ? ஆம், இரவில்தான் சப்தங் களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும், ஒலி ஒங்கு கின்றது.

ஆனால் அன்று முதலே என்னை அறியாமலே சப்த சோதனைக்கு ஆரம்பித்துவிட்டேன். அதில் அசரீரி. அநுபவமும் ஒன்று. நம் நினைவின் ஒட்டத்தில், திடீரென்று எங்கிருந்தோ, சம்பந்தமில்லாத ஒரு தனிகுரல் கல்லெறிந் தாற்போல் விழுந்து கலக்குவதை?-இதைச் சகுனம் பேசுதல் என்பதா சப்த ஜாலம் என்பதா?

எனக்கு ஒரு பிராண சிநேகிதனிருந்தான், அவனைப் பற்றி நினைக்கவும் கஷ்டமாயிருக்கிறது. அவன் என் வாழ்க் கையில், புகுந்து, இருந்து, மறைந்தது, ஒரு இன்பக்கனவு கண்டு விழித்தது போலேயாகும். அம்மாதிரி சிநேகிதத் திற்குப் பாத்திரனாக என்ன புண்ணியம் செய்தேனோ, அதைப்பூரா அனுபவிக்கக் கொடுத்து வைக்காவிட்டாலும்:

அவன் ஒருநாள் மாலை உலாவிவிட்டுப் படுத்தான், தலை வலிக்கிறதென்று. அவ்வளவுதான். மடமடவென்று அன்றிரவு ஏறிய ஜுரத்தில் காலை வரையிலும் காத்திருக்க முடியவில்லை. இரவோடிரவாய்க் கொண்டுபோய் ஆஸ்பத் திரியில் சேர்த்துவிட்டார்கள். மறுநாள் எனக்கு வார்த்தை வந்தது. அவனைக் காண வீட்டை விட்டுக் கிளம்பினேன். வாசல்படியிலிருந்து காலெடுத்து வைக்கும்போதேதெருவில் யாருடனோ எதுவோ பேசும் எவனோ ஒருவன் அது அப்பவே தீர்ந்துவிட்டதே!-என்றான். எனக்கு அப்பவே தெரிந்துவிட்டது ஆஸ்பத்திரியில் அவ்ன் படுக் கையை சுருட்டியாய் விட்டதென்று. இருந்தும் சென்று, அந்தக் கட்டிலை வெறுத்துப் பார்த்துக்கொண்டே நின்றேன். அடிவயிறு சுருட்டியது.

அவருடலை அப்பவே கெடங்குக்கு எடுத்துப் போயிட் டாங்களே! என்று வார்டு பையன் கூறியது காதில் விழுந்ததேயொழிய அப்பொழுது மூளையில் ஏறவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/47&oldid=544136" இலிருந்து மீள்விக்கப்பட்டது