பக்கம்:உத்திராயணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 {} லா, ச. ராமாமிருதம்

பங்களிருக்கின்றன. காசைக் கொடுத்தால் சமையல்காரிஇதெல்லாம் என்ன, பவானியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே, பசியும் வருமோ?

பவானியை நீங்கள் பார்த் திருக்கிறீர்களா? இல்லை. எங்கு பார்த்திருக்க முடியும்? கதவின் மேல் சாய்ந்தவண்ணம் ஒருகாலை அழுந்த ஊன்றி இன்னொரு காலை ஒடித்து, நிலை வாசலில் நின்றுகொண்டு, நெற்றிப்பொட்டில் சரிந்த மயிர் சற்றுக் கலைந்து மோத, தோளில் மோவாய்க் கட்டையை அழுத்தி, கண்களை மலர்த்தி, உம்முடைய கண்களினுள் உம்மை வெறித்து சற்றுக் குழிசிரிப்பாய் சிரித் தாளெனில் வந்தது உலை, உம்முடைய மனநிம்மதிக்கும் துாக்கத்திற்கும். அத்துடன் உரக்க உரக்கவும் சிரித்து விட்டால்-என் செவியின் கூர்மையில், என் கண்கள் மங்கி விட்டன. அவள் உடலழகைவிட, அவள் சிரிப்பின் ஒலியை யும், அவள் குரலின் ஒசையையும்தான், நான் அனுபவிக்க முடியும்.

அவள் பேச்சுக்கு, குடத்தில் தண்ணிர் தளும்பும் சத்தம் தான் உவமை. அவள் சிரித்தால் ஒடும் தண்ணீரில் கல்லை விட்டெரிந்தாற்போல், ஸ்வரமும், அபஸ்வரமும் கலந்த ஒரு தனி நாதம் கிளம்பி உள் இதயத்தைக் கொள்ளை கொண்டு விடும். ஆம் நீங்கள் பவானியைப் பார்த்தும் கேட்டுமிராத

வரையில் தப்பித் தீர்கள். அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணாத் துன்பம். அவ்:

வானந்தமே ஒரு அவஸ்தை பவானி ஒரு பேதை, எனக்கு திடீர் என்று தீராத ஒரு சந்தேகம். அவள் கஷ்டம் என்பதையே அறியாளோ? எப்பொழுதும் சிரித்த முகம் தான். கண்டதெல்லாம் சிரிப்பு ஒன்றுமில்லாவிட்டால் எதையாவது நினைத்துக்கொண்டு பாவம் சிரித்துக்கொண் டிருப்பாள்!

திடீரென்று ஒருநாள் நினைத்துக்கொள்வாள். மூலை யில் புழுதி படிந்து உரையும் போடாமல் நிற்கும் வீணையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/50&oldid=544139" இலிருந்து மீள்விக்கப்பட்டது