பக்கம்:உத்திராயணம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி 全

ஐயையோ கொலை, கொலை!"

பயத்தால் வெளுத்த அவள் முகத்தில் நீலமும் படரு வதை என் கண்ணாலேயே கண்டேன். குழந்தையை அப்படியே கீழே வளர்த்திவிட்டு, அங்கு விட்டு அகன்றேன்.

அன்றுமுதல் குழந்தை அருகே செல்லவும் எனக்குச் சமயம் வாய்ப்பதில்லை. அவன், அவளிடுப்பிலிருந்து கொண்டு, கைகளை நீட்டி நீட்டி, என்னைப் பார்த்துச் சிரிக் கிறான். நான் வேதனையடைகிறேன்.

岑 凑 ::

நாதபிந்துவின் பிரம்மாண்டமான சுழலில் சில சமயங் களில் அதன் வேகத்தை நாம் தொட முடிகிறதேயொழிய, காதால் கேட்க முடிகிறதில்லை. அம்மாதிரியான அபூர்வ மான சந்தர்ப்பங்களில் நம்மனம் அக்கன வேகத்தில் அகப் பட்டு தன் செயலிழந்துவிடுகிறது. உடலெல்லாம் ஒரே மாதிரியாய் விறுவிறு'க்கின்றது. மெளனமும் வாய்விடாமல் அலறி நம்மைக் கட்டிவிடுகிறது.

அம்மாதிரிதான், இன்றிரவு, நான் எங்கேயோ போய் விட்டுத் திரும்பி, மாடியேறி, ஹாலில் நுழைந்து விளக்கைப் போட

இல்லை போட வரவில்லை. பொத்தானை அமுக்க விரல் மறுத்துவிட்டது. என் இதயம் தொண்டைவரையில் எழும்பி வாயை அடைத்துவிட்டது. உடம்பெல்லாம் ஒரு பயங்கர பரவசம்.

என் அறையில் யாரோ இருப்பதாக உணர்ந்தேன். பொத்தானில் வைத்த கை வைத்தபடியே, அப்படியே கல்லாய்ச் சமைந்தேன்,

எனக்கு வரவர பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கு-வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கேன்.'

(இது பவானி)