பக்கம்:உத்திராயணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 லா, ச. ராமாமிருதம்

நான் அப்பவே சொன்னேன்.-’’

இது வேற்றுக்குரல், சப்த சோதனைகளிலேயே தோய்ந்த என் மூளை விறுவிறுவென்று வேலை செய்து, சாதக வேகத் தில் இந்தக் குரலையும் தாக்கல் செய்துகொண்டு, அதன் குண குணங்களை அலசி ஆராய்ந்து-எல்லாம் ஒரு இமைப் பொழுதில் பாகுபடுத் திவிடுகிறது

ஆம் இதுவும் சுவாரஸ்யமான சாரீரந்தான். அசாதாரண மில்லாவிட்டாலும் ஆண்மை மிகுந்து கன மிருதுவாய் மழை. இருளைப்போல், மனத்தின் ஒரு இன்பமான அச்சத்தை யுறுத்தும் பெண்களுக்கு மிகவும் இச்சையான குரல்

ஆமாம் நான் அப்போ என்னத்தைக் கண்டேன்?’’

  • ஆம், என்னத்தைக் கண்டாய்?-உனக்குப் பணம் ஒன்றுதான் பிரதானமாயிருந்தது. புதுப் புடவை, தைலம், ஸ்நோ, நகை, நட்டு-"

சுதர்சனா, இந்த சமயத்தில் சொல்லிக் காண்பிக்கவா உம்மைக் கூப்பிட்டு அனுப்பித்தேன்?’’

ரொம்ப பேஷ், பெண்கள் ஸ்பாவமே இப்படித்தான். தங்களிஷ்டப்படி ஆடவும், தங்கள் சிக்கல்களை நிவர்த்திக் கவும் தான் கடவுள் ஆண்களைப் படைத்திருக்கிறார் என்று: -பவானி, அந்நாளை நினைத்தால்

"சுதர்சன், நாம் இப்பொழுது சண்டையா போடப் போகிறோம். அந்த சமயத்தில் ஏமாந்துபோய்விட்டேன். என் வீட்டில் என்னமோ படிக்க வைத்தார்களேயொழிய, கையில் ஒன்றும், ஈரம் இல்லை. எனக்கும் மாற்றாந்தாய்க் கொடுமை பொறுக்காமல், எப்படியாவது வீட்டை விட்டுத் தப்பித்தாலே போதும் என்றாகிவிட்டது. ஆனால் அப் பொழுது இவர் அவ்வளவு மோசமாயில்லையே...”*

என்றைக்குமே அவன் கிறுக்குத் தான்-என்ன செய்: கிறான்?" அம்மாதிரி கேட்டால் நான் என்னத்தைச் சொல்ல? அவருடைய பார்வை எனக்குப் பயமாயிருக்கு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/54&oldid=544143" இலிருந்து மீள்விக்கப்பட்டது