பக்கம்:உத்திராயணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 லா, ச. ராமாமிருதம்

சென்று அவள் மயிரைப் பிடித்து இழுத்து, அவள் முகத்தை நிமிர்த்தி, குரல் வளையில் கையை தைத்து அழுத்தி, நாவல் பழம் போன்ற அவள் கண்கள் பிகுங்குவதை

சீ, இதென்ன, அவள் சந்தேகப்படுவதே போல், எனக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டதா?’’

மறுபடியும் அந்த ஜோ சத்தம்-என் எண்ணங் களுடன் கலந்து, நினைவின் ஒட்டத்தையே கலக்குகிறது.

-இல்லை அவளைக் கொல்வதில் என்ன பயன்? என்ன நியாயமுண்டு?-நீ அவளை மணந்தாயா-அல்லது அவளிடம் பரிணமிக்கும் இனிய நாதங்களை சதா அவளிட மிருந்து பருகுவதற்கே மணந்தாயா?-நாத சோதனையின் தத்துவத்தையும் ஸ்திரீ புருஷ வாஞ்சையையும் ஒன்றாய்க் குழப்பி உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே

அவ்விரைச்சலில் எனக்கு யோசனையே ஒடமாட்டேன் என்கிறது. அவள் இனி உன்னிடம் இருக்கமாட்டாள் அவளில்லாமல், நீ இருப்பாயா?--

ஜோ-ஓ-ஓ-l-'

எனக்கு மூச்சுத் திணறிற்று ஜன்னலைத் திறந்தேன். மையிருள், உலகத்தை மலைப்பாம்பைப் போல் விழுங்கி யிருந்தது. குளுகுளுவென்று சுழல் காற்று முகத்திலும், கண் ரப்பையிலும் மோதியது. சமுத்திரக் காற்று-அலைகள் ஓயாது, கரையில் மோதி மோதி அலறுகின்றன.

ஜோ-ஓ-ஓ-ஒ' - ஒசையின் முடிவு, ஒங்காரத்தின் குழலோசை, அலைகளைத தாண்டினால்-அப்பால், நாதாந்த மோனம்-நிர்ச்சலம், நிம்மதி

ஆம், இதுதான் வழி-அதுவும் ஒரே வழிதான்-எனக்கு அலுப்பாயிருக்கிறது-ரொம்பவும் அலுப்பா-யிரு-க்கிறது:

அலை ஒய்வது எப்போ?-நான் நீந்தி அக்கரை போவது எப்போ?-அலை ஒயும்வரை நான் காத் திருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/56&oldid=544145" இலிருந்து மீள்விக்கப்பட்டது