பக்கம்:உத்திராயணம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壬& லா ச. ராமாமிருதம்

வெங்காயக் கலரில் ஒரத்தில் பச்சைக் கரை போட்ட புடவை கட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மாங்கல்யச் இரட்டையும் ஒரு பவழ மாலையையும் தவிர வேறொரு நகை யும் இல்லை. அவளால் ஒரு நொடிகூடச் சும்மா அசையாமல் இருக்க முடியவில்லை. அப்படியும் இப்படியும் நகருவதினால், அவள் கால் காப்புகள் ஒன்றோடொன்று உராய்ந்தும் மெட்டி கட்டாந்தரையில் தேய்ந்தும் உண்டாக்கும் சப்தம் ரொம்பவும் இனிமையாகயிருந்தது.

அவள் கணவன் ஒரே அட்டைக் கரி பளபளவென்று பாலிஷ் போட்ட கருங்காலி மரத்தின் கறுப்பு. அப்பளாக் குடுமி, ஜம்மென்று நன்றாய்க் கட்டுவிட்ட தேகம் கரணை கரனையாய் நரம்புகள் விம்மிப் புடைத்து எழும்பி திடகாத் திரத்தைக் காட்டின. புகையிலையை ஒரு பக்கம் அடக்கி விருந்ததினால், ஒரு கன்னம் ஒரேயடியாய் முண்டிக்கொண் டிருந்தது. இடுப்பில் சுமார் ஒரு முழ அகலமேயுள்ள சிகப்புத் துண்டு ஒன்றைக் கட்டியிருந்தான். அவன் கண்டச்சதையில் முளைத் திருந்த சிறுமயிர்கள் சுருண்டுகொண்டிருந்தது கூட நன்றாய்த் தெரிந்தது. அவன் முகத்தைப் பார்த்தால், தனியை நன்றாய் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, ஆனந்த மாய் அரைக்கண் மூடியவண்ணம், அசைபோட்டுக் கொண் டிருக்கும் எருமை மாட்டின் ஞாபகம் வந்தது. அதுவும், இப்பொழுது அவன் முகத்தில் அசட்டுக்களை இன்னும் அதிகம் சொட்டிற்று.

ஏனென்றால், அவள் நாலு ஆடுகள் வெட்டக் கொடுப் பதுபோல் கொடுத்துவிட்டு, பாக்கி எட்டு ஆடுகளைக் கொண்டு அவன் மூன்று புலிகளையும் மடக்கிவிட்டாள். ஆகையால்தான் அவன் இப்பொழுது திறு திறுவென்று விழித்துக்கொண்டிருந்தான். அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

மிகவும் கஷ்டப்பட்டு, இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு தலையைக் குனிந்து அவன் முகத்தைப் பார்த்து விட்டுப் பக்'கென்று சிரித்தான். வேணுமென்று குறும்புத்