பக்கம்:உத்திராயணம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 லா, ச. ராமாமிருதம்

இங்கேருந்து சுமார் ஒரு பர்லாங்கு தூரத்திலே, ஒரு வாய்க்கால் ஒடறதாம். வருஷத்திலே ஆறு மாசம் வத்திக் கிடக்குமாம். $r3ঠ লেী வாய்க்கால் வேண்டியிருக்கோ

தெரியல்லே.

ஜன்னல்லேருந்து பார்த்தா கோவில் ஸ்தூபி ஒன்று தெரியறது. செம்போ என்னமோ தெரியல்லே திட்டு திட்டா, கன்னங் கரேலுன்னு கறுத்திருக்கு அம்பாள் கோவி லாம். வாசக்கூட்டி ஏதோ பேர் சொன்னா. வாயிலேகூட துழையல்லே. மறந்துடுத்து. ரொம்ப சக்தி ஜாஸ்தியாம். அவளுடைய சக்தியெல்லாம் மந்தரப் பிரயோகம் பண்ணி, சக்கரம் போட்டு, அதை அதிலே அடைச்சு வெச்சிருக் காளாம்.

இடத்தே விஸ்தரிச்சாச்சு, மனுஷாளோ சொல்ல வேண்டியதில்லை. இவா ஆனாலும் இப்படி இருப்பான்னு நான் கனவுலே கூட நினைக்கல்லே...

பொழுது விடிஞ்சா கேஸ், பொழுது போனா கேஸ், எப்போவானாலும் கேஸ்ா? நானும் இதுக்கூன்னு பரீகைrயா இரண்டுங்கட்டான் சமயமெல்லாம் அவச ரூம் பக்கமாப் போய்ப் பார்க்கறது. எப்பொ போனாலும் சரி, ககதி’’, மராமத்து’’, ’பட்டா' , ஜப்தி'ன்னு மாத்தி மாத்தி இதே பேச்சாயிருக்கும். சரியா கார்த்தாலே ஒம்பது மணி அடிச்சுதோயில்லையோ பலகாயேப் போட்டுண்டு சாதம் போடு இங்கறாளே, அதோடு சரி. அப்புறம் கோர்ட்டுக்குப் போயிடரா. மறுபடியும் சாயந்திரம் ஏழு மணி, எட்டு மணிக்குத்தான் ஆசாமியைப் பார்க்கலாம். அப்போ கூட, என்ன, சாப்பிட்டு கையை அலம்பிண்டதும் அலம்பிக் காததுமா. ரூமுக்குப் போயிட வேண்டியதுதான். மானம் வெக்கத்தே விட்டுட்டு நானா ரெண்டு தடவை பேச்சுக் குடுத்துக்கூடப் பார்த்தாச்சு. மசியறதாக் காணோம். இப் படியாப்பட்டவாள்ளாம் என்னத்துக்குக் கலியாணம் பண்ணிக்கறாளோ தெரியல்லே. சமைச்சுப் போடறத்துக்