பக்கம்:உத்திராயணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔& லா. ச. ராமாமிருதம்

உடனே தீபாராதனை ஆரம்பம் ஆயிடுத்து குருக்களை

அப்போதான் நான் சாவகாசமாய்ப் பார்த்தேன். அந்த ஒடம்பு, எப்படித்தான் அந்த மெருகு வந்ததோ தெரி யல்லே! செக்கச் செவேலுன்னு நல்ல சிகப்பு. அந்த மயிரும் நன்னா அடர்த்தியா, பட்டுக் குஞ்சம் மாதிரி, சுருட்டை சுருட்டையா, பளபளன்னு காது, புடரி நெத்தி முன்னா டிக்கே எல்லாம் தொங்கறது. கருசரு"ன்னு தாடி வெச்சிண் டிருக்கான். திrையோ என்னமோ தெரியல்லே. மூஞ்சியும், மூக்கும் முழியும் நெத்தியும் அவ்வளவு எடுப்பா நான் எங்கே யும் பார்த்ததில்லே. அப்பா புருவம் எவ்வளவு அடர்த்தி,

என்னமோ இரண்டு வில்லை, நன்னா வளைச்சு விட்டாப் போல இருக்கு அவன் ஒடம்பசையாமே ஒவ்வொரு தீபமா எடுத்து அம்மனுக்குக் காட்றபோது எனக்கு என்னமோ

கல்பூரம் கொழுந்துவிட்டு அசையாமே அலுங்காமே எரியறதே, அந்த ஞாபகம் வந்துடுத்து. தம்பிகூட

பம்பரத்தே விட்டுட்டு, அக்கா பம்பரம் துரங்கறது பார் அக்கா! அப்படிம்பன்! அதுமாதிரி, உடம்பையும் மனசையும்

அப்படி இப்படி போகவொட்டாமல் வசப்படுத்தி ஒரே நிலையா... பார்த்தா, என்னமோ ஒருவிதமான பீதிகூட உண்டாகிறது.

என் மனஸ்-க்குத்தான் அப்படித் தோணித்தோ என்னமோ தெரியல்லே...கும்பவிளக்கு, ரதவிளக்கு, நகrத்ர விளக்கு இதெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்துக் காட்ற போது, என் பேரத்தான் 'விலாஸினி ன்னு காதிலே எழுதர மாதிரி இருந்தது.

கடைசியில் எல்லாருக்கும் குங்குமம் குடுத்தான். என் கிட்ட வரபோது, ஒரு ரெண்டு விநாடி அப்படியே அசை யாமே நின்னான். அந்த ரெண்டு விநாடியும் ரெண்டு யுகமா யிருந்தது. எனக்கு ஒண்ணுமே தோணல்லே. தலையேக் குனிஞ்சுப்பிட்டேன். ஆனா முடியல்லே. ஏதோ பிடிச்சு இழுக்கிற மாதிரியிருந்தது. மறுபடியும் தலைநிமிர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/68&oldid=544157" இலிருந்து மீள்விக்கப்பட்டது