பக்கம்:உத்திராயணம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புண்ய காலம்வானதி பதிப்பகத்தின் ஆதரவில் மீண்டும் சந்திக்கிறோம்.

நாலு தலைமுறைகளின் காலவீச்சுகள் அடங்கிய இக்கதைகளை, அவை தோன்றிய வரிசையில் கிரமப்படுத்தவில்லை. இந்தக் கலவை. இப்படியும் ஒரு ருசி இருந்துவிட்டுப் போகட்டுமே! வாயுள்ள பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்ளும்.

ஆனால் இரண்டு கதைகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவை தோன்றிய வழியில் அல்ல. அவை என்னை கிளர்ந்த வழியில்

உத்தராயணம் என்றாலே எனக்கு முன்னால் நினைவுக்கு வருவது பீஷ்மன்தான். பீஷ்மனின் தனிமை, தனித்தன்மை வாய்ந்தது. பிறக்கையிலேயே ஆதர்ஸ புருஷன் தன் பிரம்மசரிய சபதத்தினால், மனிதப் பிறவியிலேயே கடவுள் தன்மையை எய்து விட்டான்.

சாதாரணமாகவே லோகாதயமான செல்வங்களிலேயே, அல்லது ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டுவிட்டால் முதலில் உணருவது தன் தனிமைதான். அந்த நிலையில், பிறரின் தன்மைக்குத் தக்க,