பக்கம்:உத்திராயணம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷ö லா ச. ராமாமிருதம்

இதுமாதிரி எத்தனை நாழி நின்னுண்டிருந்தோமோ தெரியாது, என் மனவலிலே எண்ணாத எண்ணமெல்லாம் தோணித்தோணி மறைஞ்சுது. இருந்தாப்போல இருந்து, என் பக்கமா மெள்ள வர ஆரம்பிச்சான் எனக்கு அப்படியே அடிவயத்தே சுருட்டிண்டுது. ஐயையோ!' என்றேன். ஆனால் நான் சொன்னது எனக்குத்தான் கேட்டிருக்கும். மத்தவாளுக்குக் கேட்டிருக்குமோ கேட்டிருக்காதோ, என் தொண்டையெல்லாம் அடைச்சுப் போச்சு.

சிரிச்சுண்டே வந்தான். திடீர்னு கையைப் பிடிச்சான். குப்’னு நேக்கு வேர்வை விட்டுப்போச்சு அடப்பாவி: இன்னுண்டு கையை ஒதறினேன். அவன் விடவே இல்லை. இன்னும் நன்னா அழுத்தமாப் பிடிச்சுண்டுட்டான்.

'நீ சொன்னா நான் நம்புவேனா என்ன? உன் கண்ணு தான் தனியா பேசறதே! இன்னுண்டே சிரிச்சான். எனக்கு ஒடம்பு வெடவெடன்னு ஒதற ஆரம்பிச்சுடுத்து.

விலாஸினி' இன்னு உள்ளேருந்து குரல் கேட்டுது. நான் என்னத்தே பண்ணுவேன்?

"அவா வந்துட்டாடா, விட்டுட்றா விட்டுட்றா!' இன்னு கெஞ்சினேன். அவன் கொஞ்சங் கூட சட்டையே பண்ணல்லே.

நாளைக்கு இத்தனை நேரத்துக்கு வருவேன்'

இன்னான்.

விலாவதிரீை:” ஐயையோ!'ன்னுண்டு கையை ஒதறினேன். சொன்னாத்தான் விடுவேன்: ' இன்னு கையைப்

பிசைஞ்சான். தப்பிச்சாப் போரும்னு ஆயிடுத்து.

ஆகட்டும் இன்னுப்பட்டேன்.