பக்கம்:உத்திராயணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலை $ 3

என் மனளிலே அவன் மூஞ்சி என்னேப் பார்த்ததும் மலர்ந்ததையும், அவன் பிரியமா சிரிச்சதையும் நினைக்க நினைக்க ஆனந்தமாயிருந்தது. சாதம் கூட வேண்டியிருக் கலே, பேசாமே போய்ப் படுத்துண்டுட்டேன். மணி பன் னண்டு ஆனப்பறம்தான் கொஞ்சம் கண் அசந்தேன்.

ஐயோ! ஒரு கனாக் கண்டேன். எங்கேயோ இப்டி போறமாதிரியிருக்கு. எங்கே பார்த் தாலும் வயலும் பச்சைக் கதிருமா ரமணியமாயிருக்கு, திடீர்ன்னு ஆகாசத்திலே, கருப்பா ஒரு மேகம் கிளம்பி உருண்டு திரண்டு என் முன்னாலே வந்து நின்னுது, கொஞ்சம் உண்ணிப்பாப் பார்த்தேன். கோவில்லே பார்த் தேனோ, அப்படியே ஜகதீஸ்வரி வந்து நின்னா. காதுலே குண்டலம்; க்ரீடத்திலே இருக்கிற ரத்தனமெல்லாம் திடு திடுன்னு நெருப்பு எரியறமாதிரி இருந்தது. ஒரு கையிலே சூலம். ஒரு கையிலே கபாலம், காலாலே மகிஷா சூரனை மிதிச்சுண்டு இருந்தா.

என்னேப் பார்த்ததும் அவள் பச்சை முகம் கறுத்தது.

அடியே! பாபீ! தான் அப்படியே நடுநடுங்கிப் போயிட்டேன்.

தாயே! நான் என்ன பண்ணிப்புட்டேன்' இன்னு அலறினேன்.

என்னவா பண்ணிப்பிட்டே ஒனக்கு என்ன தைரி யண்டி கொண்டவனை மறந்துட்டது போறாதுன்னு, ஆ? அதுவும் என் பக்தனை- பச்சைக் குழந்தையை... இன்னு கத் திண்டே கழுத்தை நெறிக்கராப்போல கையை வச்சிண்டு பக்கத்திலே வந்துட்டா.

க்ரீச்” இன்னு நான் போட்ட சத்தத்துலே, அவா கூட ஆபீஸ் ரூமிலேருந்து அலறிப் புடைச்சுண்டு ஓடிவந்தார். அப்புறம் என்ன நடந்துதோ எனக்கு ஞாபகமில்லே. மறுபடி யும் நினைப்பு வந்தப்போ கட்டில்லே கிடக்கிறேன். தலைல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/73&oldid=544162" இலிருந்து மீள்விக்கப்பட்டது