பக்கம்:உத்திராயணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁垒 லா ச. ராமாமிருதம்

ஐஸ் வச்சிருக்கு, டாக்டர் பரிrை பண்ணிப்பிட்டுப் பக்கத்து ரூமுக்குப் போயிருக்கார். இவாளுங் கூடப்போனா என்னமோ, "க்ளைமேட், ஹீட், ஸ்பாயில் ஆயிடுத்து, ஸ்ட் ரோக் டேஞ்சரஸ்'ன்னு ஏதேதோ வார்த்தை கேட்டுது.

இவா மறுபடியும் வந்து ஒக்காந்தபோது, மூஞ்சி மாறி யிருந்தது. ஆபீஸ் ரூமுக்குக்கூடப் போகல்லே. பக்கத்தி லேயே ஒக்காந்துண்டு என் நெத்திலே கையை வெச்சிண் டிருந்தா. இப்போத்தான் சாப்பிடப் போனா...

பராசக்தி நான் என்ன பண்ணுவேன், நீ கூட என்னை எதிர்த்திண்டா?

சித்திரை 15: காலை 8.39. மணி ஊர்லேருந்து அம்மா, அப்பா எல்லாரும் வந்துட்டா. யார் வந்து என்ன?

ராத்திரி 9.30: இன்னிக்கி சாயந்தரம் ஒண்னு கேள்விப் பட்டேன். அவனுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்தாம். வரவா போறவா எல்லாரையும் கட்டிக் கட்டி முத்தமிடறானாம். செவிரு ஜன்னல் நாற்காலி, தரை எல்லாங்கூட! டாக்டர். அவன் வீட்டிலேயே பரம்பரையாக் கொஞ்சம் மூளைக் கோளாறு உண்டுன்னார், ஏதோ பேச்சு நடுவிலே.

சித்திரை 16: காலை 8.30. அவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாளாம். அடப்பாவி: நீயும் மோசம் பண்ணிப்பட்டையா?

சித்திரை 17: காலை 8.30. என்னால் எழுத முடியல்ல! கை வெடவெடங்கறது. கோணக்கோண இழுக்கிறதே!

ராத்திரி-9. சத்தே தேவலை, சித்திரை-18. நேத்து ராத்திரி சொப்பனங் கண்டேன், தேவி சூலத்தையெடுத்து என் மாரிலே பொறித்தமாதிரி யிருந்தது. இனிமே சந்தேகமில்லை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/74&oldid=544163" இலிருந்து மீள்விக்கப்பட்டது