பக்கம்:உத்திராயணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடிக்கொண்டே இரு

ஆகவே சாலை ஒரமாய், மரங்களின் நிழல்கீழ் நடந்து போய் போய்க்கொண்டேயிருக்கையில் ஒடும் ஜலவாஸனை எட்டி, தாகம் புரண்டெழுந்து, திடீரெனத் தாகம் தாங்க முடியாமல், தண்ணிர் திக்கு நோக்கி நடந்து கரையடைந் ததும், தோள்மூட்டை (உலகத்தில் அவன் உடமை அனைத்தும் அதில் அடங்கியதோடு சரி)யைக் கீழேயிறக்கி, தானும் அதனருகே இறங்கினாற்போல் உட்கார்ந்து, காலை நீட்டி, உட்கார்ந்த இடத்திலேயே புற்றரையில் கரையின் சரிவோடு சாய்ந்து முகம் வானை அண்ணாந்ததும்

- அம்மாடி!"

நிர்ச்சல வானம்: நீல பராபரம். இதுமாதிரி, நெற்றி வேர்வையைப் பரிவுடன் காற்று ஒற்றும் ருசி அனுபவிச்சாத் தான் தெரியும். வருடக்கணக்கில் பாம்பு காத்தையே உட் கொண்டு வாளுதாமே! அந்த வித்தை நமக்கும் வசப் பட்டால் நாள், ஒரு கண்டமா ஒட்ட வேணாம். ஒருநாள் பிச்சை, ஒருநாள் திருடு-ஹாம்-நாய் துரத்தி, ஆள் ரைட்டி, போலிஸ் உதை-அதென்ன அப்பிடி அடி வவுத்தில் குத்தறான்? குடல்ே சரிஞ்சுபோச்சு உள்ளே கடியாரம் இப்பவே என்ன ஆச்சோ என்ன கண்டது? எல்லாம் இந்த வவுறு: மானங்கெட்ட வவுறு:

5 سه سي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/75&oldid=544164" இலிருந்து மீள்விக்கப்பட்டது