பக்கம்:உத்திராயணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடிக்கொண்டே இரு 67

செவி நரம்பு எடுத்துவிட்டது. குடல் குலுங்கிற்று ஏற் கெனவே உதை நொந்த குடல். அள்ளிய ஜலத்தை அப் படியே சிதறிவிட்டு கரையேற முயன்றான். இருமுறை சறுக்கிவிட்டது. எந்த வேரோ முண்டித் தடுக்கிற்று. சமயத்தில் மோசம் பண்னவே பூமிக்கடியில் ஓடிவருது. இறங்கின இடம் வேறு. இப்போ கரையேறத் தவிக்கிற இடம் வேறே. ஒரு வழியா ஏறி, முட்டையைத் தேடிப் பிடிச்சுத் தோளில் மாட்டுவதற்குள், நாலு கால் பாய்ச்சலில் ஓடிவந்து 'லொள் லொள் அவனைச் சூழ்ந்துகொண்டது. எப்பிடித் திரும்பினாலும் அங்கு ஒரு ளொள் முளைத்தது. தப்ப வழி பில்லை. புதர் மறைப்பிலிருந்து வரதைப் பார்த்தா, குட்டிக் குரைப்பாத்தான் தெரியுது.

நாய் என்றாலே அவனுக்குத் தனி நடுக்கம் ஒரு சமயம் வேணாம், வேணாம்! இந்தச் சமயத்தில் நினைக்கக்கூட வேணாம். நினைச்சாலே பிடுங்கின இடத்தில் கண்ட சதை சுறீலிட்டது. மாதமாயும் ரணம் ஆறவில்லை. குதறிப் போச்சு. தர்ம ஆஸ்பத்திரிக்காரனுக்கு அலுத்துப் போச்சு,

ஆத்தா! வெறி பிடிச்ச மாதிரி குரைக்குதே,

ஜிம்மீ! ஜிம்மீt ஷட்அப்'

ஜிம்மீ. டெளன் ஐ ஸே!'

இளநீராட்டம். அவ்வளவு இனிப்பு குளுகுளு குழந்தைக் குரல்,

ஜிம்மி படிப்படியாக ஒய்ந்தது. உடனே அடங்கிவிட் டால் அதன் சூரத்தனம் என்ன ஆவது?

உடனே எதிர்ப்புறமாய் எதையோ துரத்தும் பாவனை யில் அதன் குரைப்பு நாலு கால் பாய்ச்சலில் ஓடி, எட்ட எட்ட ஒய்ந்தது.

அவனுக்கு மூச்சு திரும்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/77&oldid=544166" இலிருந்து மீள்விக்கப்பட்டது