பக்கம்:உத்திராயணம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 லா. ச. ராமாமிருதம்

தன்னின்று எறிந்த பெருமூச்சின் பிம்பமாய் வாடை பாய்ந்தது. அதன் கிச்சிகிச்சில் புற்கள் அனைத்தும் தலை யாட்டித் தனித்தனியாகச் சிரித்தன.

அவனுக்காக.

என்ன சின்னதுரை: இந்த இடம் உங்களதா? ரோட் டுன்னு தப்பா நினைச்சி சொந்த நிலத்துலே நுளைஞ்சிட் டேனா?' '

என் பேர் சின்னதுரையில்லே. சுரேஷ்.'

சுரேஷ்? பணக்காரப் பேருதான்!'

ஏன் கண் உனக்கு ஒரு மாதிரியாயிருக்கு?’

என்ன மாதிரி? கண்ணைக் கசக்கிக்கொண்டான்.

தேய்க்காதே! தேய்க்காதே! பையன் கத்தினான் * பயமாயிருக்கு.” .

என்ன பயம்?"

ரெண்டு கண்ணிலேயும் வெள்ளையா என்னவோ ஆடை மிதக்கிறது.’’ .

சுரேஷ் அருவருப்பில் இறுகக் கண்ணை மூடிக்கொண் டான்.

  • “@。 அதுவா? பூ.'

பூவா! அதென்ன கண்ணுலேகூட பூக்குமா என்ன செடியில்தான் பூக்கும்.'

அப்பிடியெல்லாம் கேட்கக்கூடாது. ஆத்தா கோவி சுக்குவா."

  • ஆத்தா? அது யாரு ஆத்தா?’’

அதெல்லாம் உனக்கேன்? வேணாம் சின்னதுரை' கெஞ்சினான்.

என் பேர் சின்னதுரையில்லை. சுரேஷ். ూ ః :

உன் பேர்

石矿@了@A