பக்கம்:உத்திராயணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 డ్జ}{f ராமாமிருதம்

என்னை எல்லாரும் குழந்தை குழந்தைன்னு: அடக்கறா பையன் குரலில் கண்ணிர் துளும்பிற்று.

எதிலும் சேத்துக்க மாட்டேன்கறா. ஸுரேஷ், பெரியவா பேசிண்டிருக்கோம். மாடிக்குப் போ- அப்பா அதட்றா ஒயற காலத்துலே நான் ஒண்ணைப் பெத்துட்டுப் படற பாடு"ன்னு அம்மா அலுத்துக்கறா. “ஸ்”ரேஷ், நானும் ஸ்-ரேஷாம் பேசறதை-அது இன்னொண்ணு ஸ்-ரேஷ்ஒட்டுக்கேட்டு ஒண்னுக்கு மூணா அப்பாகிட்டே கோழி மூட்டிக் கொடுக்கவா? என்ன வேடிக்கை பாக்கறே?' அக்கா விரட்டறா எதிர்வீட்டுப் பக்கத்து வீட்டுப் பசங்க எந்த விளையாட்டிலும் சேத்துக்க மாட்டேங்கறாங்க. எனக்கு. இன்னும் நாலு வயசு போகணுமாம். அண்ணாதான் சிகரெட் பிடிக்கறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுண் டிருக்கான். எனக்குத் தெரிஞ்சால்தான் என்னன்னு நெனச் கண்டிருக்கான். நான் இன்னும் அப்பாகிட்டே சொல்லல்லேஎன்னை ஒரு ஆளா மதிக்கல்லே.'

அடி சக்கை, நீ பெரிய ஆளுதான், பாப்பா!'

ஸ்-ரேஷ-க்கு மண்டையுள் தளைத்தது. ஜிம்மீ! ஏ ஜிம்மி"

கண்ணாயிரம் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தான். வேணாம் சின்னதுரை வேணாம்!”

ஸ்-ரேஷ-க்குச் சிரிப்பு. ஒரே சிரிப்பு. கம்மா சுமா ஒள்ளாட்டிக்கு ஜிம்மி இப்போதைக்கு வராது. எங்கே தொலைஞ்சதோ

கண்ணாயிரத்துக்குத் தைரியம் கொடுக்கவில்லை. இந்தப் பணம் படைச்சவங்களையே நம்பறதுக்கில்லை, இவன் கோளத்தை, ஆனால் இவன் வந்த வழி என்ன பாடு படுத்தறான். காத்தோ கண்ணைச் சொருவுது. குதிரை மாதிரி ஒரு தடவையாட்டியும் புரண்டெழுந்தாத்தான் வசப்படும். ஆனால் இது: கண் அசரவிடாது போலிருக்குதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/80&oldid=544169" இலிருந்து மீள்விக்கப்பட்டது