பக்கம்:உத்திராயணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 லா ச. ராமாமிருதம்

பச்சையாம் சிவப்பாம் ஊதாவாம் என்னென்னவோ சொல்றாங்க. என்னத்தைக் கண்டேன்? மூக்கு முகந்து, கையால் தொட்டறிஞ்சது, மத்தது ஒண்னும் அறியேன். இவன்கிட்டே சொன்னா இவன் என்ன புரிஞ்சுக்குவான்?

  • -எங்கப்பாகிட்ட நிஜத் துப்பாக்கியிருக்கு தெரியு மோன்னோ? அதைச் சுவத்திலே மாட்டியிருக்கு அவர் ருமுக்குள்ளே யாரும் போகக்கூடாது. எப்பவும் பூட்டி யிருக்கும். நான் மிஸ்சிஃப் பண்ணுவேனாம்.'

உேங்க அப்பாரு யாரு?’’

அளிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர்.”

ஐயையோ!'

  • நீ ஏன் பயப்படறே? நீ திருடனா?*

நீங்கள் ஆளை அடிக்கத் தப்பு பண்னியாவனுமா என்ன? போலீஸ் இன்னாலே நாய் துரத்துது குடல் துடிக்குது.

கண்ணாயிரம் பயப்படாதே. நீ திருடனில்லேன்னு டாடிகிட்டே சொல்றேன்.

டாடி?’’

அப்பா ’

அவனுக்கு மனம் நெகிழ்ந்தது.

சின்னதுரை, கிட்டே வாயேன்."

ஸ்-ரேஷ் சற்று கிட்ட நகர்ந்தான்.

சின்னதுரை உன்னைத் தொடலாமா ?”

பையனுக்கு மூக்குத்தண்டு சுருங்கிற்று. நீ டர்ட்டியா இருக்கே-’

க. அப்படின்னா?’’

  • அழுக்கு.’’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/82&oldid=544171" இலிருந்து மீள்விக்கப்பட்டது