பக்கம்:உத்திராயணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துடிக்கொண்டே இரு ?别

செ. ஒரு நாளும் கிடையாது. நான் தினம் குளிக் கறேன். துணியைத் தோச்சுக் கட்டறேன். ஒரு நாள் தவறாமல் லைஃப்பாய் நீ வேணும்னா பார் என் உடம்புலே அழுக்கு இருக்குதா பார்: பொத்தான்களை அவிழ்த்து, சொக்காயைத் திறந்தான்.

ஸ்-ரேஷ"க்கு வியப்பாயிருந்தது. 'அதென்ன தழும்பு தழும்பா, சுழி சுழியா?-’’ "ஒ?’ அவசரமாக இழுத்து மூடிக்கொண்டான். அது தான் ஆத்தா கொடுத்த ஆயிரம் கண்.'

அதெல்லாம் முழிக்குமோ?’’

• நான் என்ன இந்திரனா? நீ எப்படி நினைக்கிறியோ அப்பிடி வெச்சுக்க சின்னதுரை-’’

    • 2 يوggچوي او له

சட்டென்று அவன் மேல் பாய்ந்து அவனைக் கட்டித் தழுவிக்கொண்டான். அம்மாடி, மெத்து மெத்துனு என்ன சொகம் என்ன சொகம் !

என்னை விடு என்னை விடு! பையன் திமிறினான். ஆலிங்கனம் இறுகிற்று. பையன் திணறினான். திடீரென பயம் கவிந்தது. சட்டென்று விட்டான்.

  • யூடர்ட்டி பெக்கர் வா. வா. என் டாடிகிட்டே சொல்றேன்: பையன் அழ ஆரம்பித்தான்.
  • என்ன குழந்தையாட்டம் அளுவறே, சூரப்புலின்னு சொல்லிக்கறே: ஆத்தாகிட்ட முலை உண்ண நெனப்பு வந்திடுச்சா? உன் டாடி கரடி-இங்கே எங்கேடா இருக்கு?’’

இங்கேதான் நாங்கள் பிக்னிக் வந்திருக்கோம், 433 ஐஸ்கிரீம் வாங்கிண்டு வரப்போனான். இப்போ வந் திருப் பான். அப்பாவைக் கரடி என்கிறே? இப்பவே உன்னை இழுத்துண்டு வரச்சொல்றேன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/83&oldid=544172" இலிருந்து மீள்விக்கப்பட்டது