பக்கம்:உத்திராயணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 லா, ச. ராமாமிருதம்

காப்பிக்கொட்டைச் சங்கிலிக்குத் தலை வலிக்கிறது. நீ காலமாகி வருடம் பன்னிரண்டு உன் கழுத்திலிருந்த மகிமைக்கு இத்தனை நாள் காப்பாற்றி வைத் திருந்தேன். இனி என் செய்வேன், ஒண்னும் புரியல்லியே!)

மையிருளில், நள்ளிரவில், குபிரென்று தாழம்பூ மணம் அறையைத் துரக்கிற்று. இது ஒரு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. திடீரென்று வேளையில்லாத வேளையில் தார், ரப்பர், வறுத்த காப்பிக்கொட்டை-இதுபோன்ற வாடைகள், பிறகு நாற்றங்கள்-நான் செந்தமிழ் பேச வில்லை, நாற்றம் என்றால் நாற்றத்தைத்தான் குறிக் கிறேன். கிளம்பும். ஆனால் வழக்கமாக தாழம்பூ மணத்தைப் பாம்பின் நடமாட்டத்தோடு இணைத்துப் பேசு வார்கள். என் அறைச்சுவர் வெடிப்பில் சுகமாகப் படுத்துக் கொண்டிருக்கிறதோ...? குப் பென்று வேர்த்துவிட்டது. விளக்கைப் போ. பயம்.

முதலில் இருக்கிறதோ இல்லையோ? மனங்கொண்டு மனம் சிருஷ்டித்ததுதானே என்று மனத்தைத் தாண்டி துணிச்சல் வரவில்லை. மேலே ஊறும்வரை (சில்லென்று அல் வித்தண்டு மாதிரியிருக்குமாமே! அல்லித் தண்டைப் பார்க்கவோ, பார்த் திருந்தாலும் அதைத் தொடவோ நேர்ந்ததில்லை) அல்ல... வெடுக்கென்று பிடுங்கி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருக்கும்வரை விளக்கைப் போடத் துணிச்சல் இல்லை. முதலில் கைகால்களில் செய லில்லை. பயமா? மண மயக்கமா? அதுவும் இதுவுமாய் என்னைப் பழைய வாசனைகளில், படகாய் இழுத்துச் சென்றன.

மஞ்சள் குங்குமத்துடன் அம்மா வாழ்ந்த நாளில் கூந்தல் முடிச்சில் சமயங்களில் தாழம் மடல், சொருகிய கத்திபோல் சின்ன பேனாக்கத்தி-எட்டிப் பார்க்கும். எந்தப் பூவுமே அப்படித்தான். மல்லியானால் சும்மா இரண்டு பூ. சாமந்தி ஒண்ணே ஒண்ணு. ரோஜா வைத்துக்கொண்டு பார்த்ததே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/86&oldid=544175" இலிருந்து மீள்விக்கப்பட்டது