பக்கம்:உத்திராயணம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஹாதி 77

யில்லை. அம்மா பூவைச் சரமாக அணிந்தே நாங்கள் பார்த்ததில்லை. பின்னிப் பூ முடிக்கும் நாளிலேயே அம்மா பின்னிக்கொள்வதை விட்டாச்சு. அப்பாவுக்கும் அம்மா வுக்கும் ஏதோ சச்சரவு. நான் கைக் குழந்தையோ-கையைப் பிடித்துக்கொள்கிற குழந்தையோ, தாழம்பூ ஜடை தைத் துக்கொண்டு அம்மா பெருமையாக அப்பாவிடம் காட்டவர அப்பா நோயாளி. பல கவலைகள், ஏதோ கொடுமையாகச் சொல்ல. (என்னென்று எனக்குத் தெரிந்தாலும் சொல்ல மாட்டேன்.)

அம்மா ரோஷக்காரி. அன்றிலிருந்து பின்னிக்கொள் வதையே விட்டுவிட்டாள். பிறகு மாமியார் மருமகளுக்குப் பரிந்துகொண்டு பிள்ளையைக் கடிந்துகொள்ள, அப்பாவே பச்சாத்தாபங் கண்டு அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும், பிறகு மாமியார், நாட்டுப்பெண்ணைக் கடிந்து கொண்டு, நன்னாயிருக்குடி நீ வஞ்சம் கொண்டாடறது. என் பிள்ளை ஏற்கெனவே சீக்காளியா இருக்கான்: ஊ.

ஹாம்.

கடைசியில் சமாதானச் சின்னமாக, பகவான் தாழம் பூவை மன்னித்தமாதிரி அம்மாவின் கூந்தல் முடிச்சில். சமயங்களில் சொருகிய சின்ன பேனாக்கத் திபோல் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும். அல்லது கமகமவென தக தகக்குமா? கம கம தக திக். சிந்தனையின் ஸ்வரம் எப்படி மனக்கிறது!

அப்பாவின் நோய்க்கும் எரிச்சலுக்கும் ஆனால் காரண முண்டு. நான் யார் பக்கமும் கட்சி பேச வரவில்லை.

இப்பவும் ஆஸ்துமாவுக்கு நிரந்தர குணம் உண்டோ? எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் இந்த அளவுக்கு முன்னேற வில்லையே? அவரை உயிரோடு கானனும்னா பட்டன