பக்கம்:உத்திராயணம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 லா, ச. ராமாமிருதம்

வாசம் இனிமேல் அவருக்கு ஆகாது. திறந்தவெளியும் காற்றோட்டமும் காண கிராமத்துக்குப் போயிடுங்கள்" என்று வைத்தியன் தீர்ப்பு அளித்துவிட்டான்.

அப்பா யானைக்குட்டி மாதிரியிருப்பார். தொந்தி யில்லை. கெட்டிச் சதை, காலையில் டர்பனைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாரானால், வெறும் டியூஷனிலேயே மாதம் ரூ, 200/- வருமானம் பள்ளிக்கூடத்தில் சம்பளம் தவிர, பரீட்சைத்தாள் திருத்தல் Extra. அடேயப்பா! அந்த நாளில் அது என்ன கடல் தெரியுமா? கப்பலில்தான் மிதந் தோம், என்ன செல்வாக்கு, எத்தனை உறவுகள்! வருவோ ருக்கும் போவோருக்கும் எங்கள் வீடு ஒரு ஜங்ஷன், இரண்டு வேளையும் பருப்போடு சமையல், இரண்டு வேளை டி.பன். நொறுக்குத் தீனி, எத்தனை வேளை வேணுமானாலும் காபி, அம்மாவுக்கு நன்னா பண்ணனும், நாலு பேருக்கும் கொடுக்கணும். தவிர, விருந்தினர்கள் நாங்கள் வெறுங்கை யோடு வரவில்லை என்று ஜாடை காட்டும் பிஸ்கட் பாக்கெட், காராபூந்தி பொட்டலம், வாழைப்பழச் சீப்பு. இதெல்லாம். குழந்தைகள் எங்களுக்கு அலுத்துவிட்டால் அப்புறம் நாங்கள் குழந்தைகள் எப்படி...?

ஒரு நிமிஷம் சும்மாயிருக்க முடியாத அப்பாவைத் தி டீ ரென்று கிராமத்தில் எங்கோ போர்டு ஸ்கூலில், முப்பது ரூபாய் சம்பளத்தில் தள்ளிவிட்டால்...

Cinderela-வுக்கு மணி 12 அடித்தாற்போல்-மந்திரக் கோல் வீச்சுப்போல், எல்லாம் திடீரென்று அந்த நாளாக” மாறிப்போனால் அப்பாவுக்கு எப்படித் தாங்க முடியும்?

அம்மாவின் சரடு உரத்தில்தான் ஐயாவின் மூச்சு இழையோடுது. பாட்டி நீங்க இனி ஊர்க்கவலையைப் படாதீங்க, ஒழுங்கா நீங்க புள்ளை கைக்கொள்ளி வாங் கிட்டுப் போறவழியைப் பாருங்க'ன்னு குடும்பத்தின் பரம் பரை ஜோஸ்யன் சாமிநாத பண்டிதன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் தீர்ப்பு சொல்லிவிட்டான்.