பக்கம்:உத்திராயணம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஹ"தி 79

கூட்டமும் கும்மாளமும் சிட்டாய்ப் பறந்துவிட்டது அனுதாபம் விசாரிக்கக்கூட ஒருவரும் வரவில்லை. அப்பா தான் பொருமுவார். அம்மா dont care நமக்கு நாம் இருக்கும்வரை நமக்குக் கவலையில்லை" என்று சொல்லிக் கொண்டே குத்துவிளக்கை ஏற்றுவாள். ஆனால் இன்னும் பின்னித் தொங்கவிட்டுக் கொள்ளவில்லை. எடுத்துக் கட்டிக் கொள்ளவில்லை. சபதத்தில் முடித்த கூந்தலில் ஒரு தாழம்பூ மடல் கத்திபோல் அம்மா பேச்சுக்கு சாட்சியாகக் குத் திட்டு நிற்கும்.

நமக்கு நாம் என்று சவால் விடலாம். ஆனால் நடை முறையில்.

ஒருமுறை சித்தப்பா பட்டணத்திலிருந்து நாலு நாள் ரஜாவில் வந்திருந்தார்.

  • சப்தரிஷி, இந்தப் பையன்கள் இங்கேயிருந்தால் மாடு மேய்க்கத்தான் லாயக்குபடுவார்கள். மூத்தது ரெண்டையும் என்னோடு அனுப்பி வை,’’

நீ சொல்றது என்னமோ வாஸ்தவந்தான். ஆனால் அம்பி, என் நிலை உனக்குத் தெரியும். அவர்கள் சம்பளத் துக்கோ, சாப்பாட்டுக்கோ, ஒத்தாசையா பனம் அனுப்பவோ எனக்கு வழியில்லை."

என்னடா பிரிச்சுப் பேசறே? -சித்தப்பா சீறினார், அந்த நாளின் வேர்களே வேறு! என்னையும் சிவாவையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

நன்னாப் படிச்சு இறக்கையை விரிச்சு முன்னேறப் பாருங்கோ.’’

சமத்தாப் படிங்கோ’’

சித்தப்பாவின் யதார்த்த புத் திமதிக்கும். அம்மாவின் ஆசிபலத்துக்குமிடையே எங்கள் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டு நாங்கள் சிரத்தையாகவே படித்தோம். சிவா