பக்கம்:உத்திராயணம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恕鲁 லா, ச. ராமாமிருதம்

பரவாயில்லை. நானே சொல்விக்கொண்டாலும் என் மார்க்குகள் ஏற்றம்தான். ஏழாம் வகுப்பிலிருந்தே நான் merit scholarships

வருடம் மும்முறை நவராத்திரி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறைக்கு கிராமத்துக்கு வந்துவிடுவோம்.

அம்மாவிடம் பால் குடிக்கப் போறேளா...? -சித்தி கேலி பண்ணுவாள். ரோசமாயிருக்கும். ஆனால் நாங்கள் ரோசங் கெட்டவர்கள், ஒரு வேடிக்கை சென்னையில் அவ்வளவு ஒற்றுமையாக இருப்போமே... இங்கே காலடி வைத்ததுதான் தாமதம், பழி. சண்டை எங்களிடையே மூண்டுவிடும்! என் ராசிடா!' அம்மா தலையிலடித்துக் கொள்வாள்.

எனக்குப் பன்னிரண்டு; அவனுக்குப் பத்து அண்ணன் தம்பிகளிடையே சண்டை வரக்கூடாதென்றால் ஒன்று இரட்டைப் பிறவியாயிருக்கணும். அல்லது வயது வித்தி யாசம் கணிசமாயிருக்கணும் இப்படி இரண்டுங்கெட்டா னாய் இரண்டு மூணு வயதிருந்தால், பிறந்ததிலிருந்தே பங்காளிக் காய்ச்சல்த்ான்! எல்லாவற்றிலும் மேல், அண்ணன் தம்பிகாப் பிறக்கக்கூடாது.

பிள்ளைகள் விடுமுறைக்கு வந்திருக்குக! அம்மா வித விதமா எங்களைக் கவனிப்பாள். வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் கத்தரிக்காய் எண்ணெய்க்கறி, பதக்கம் பதக்கமாக வெங்காய பஜ்ஜி, பின்னால் வயிற்றை ஒடுக்கி, வாயொடுக்கி என்ன ஆறதோ? இப்போ எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாயிருக்கோம் அன்றிலிருந்து இன்று வரை ஆயிரம் பேசுகிறோம். கலை, வேதாந்தம், விஞ்ஞானம், ஆனால் எல்லாம் கடைசியில் முடிவது திணி. யிலும் திண்டியிலும்தான்!