பக்கம்:உத்திராயணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஹ"தி 81

ஒர் இரவு மதறாஸில் புயல் அடித்தது. தெருவில் தந்திக் கம்பங்களிடையில் காற்று ஊளையிட்டது. நாங்களிருவரும் போர்வைககுள் வெடவெடவென்று, ஒருவரையொருவர் அனைத்தபடி நடுங்கிக்கொண்டிருந்தோம் குளிரினால் அல்ல. Biay போர்வை நல்ல கதகதப்பு. ஊரிலே அம்மா, அப்பா, பானு, வைத்தி, ராமு இப்போ என்ன பண்ணின் டிருக்காளோ பழைய வீடாச்சே! பெருந்திருவே-(இது பாட்டி பாடம்: எது என்னவானாலும் நம் குலதெய்வத்தை

熔 மறந்துடாதேங்கோ அவாளைக் காப்பாத்து!

ஆனால், நான் இங்கே சொல்லவந்தது, சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் போனபிறகு திரும்பிய முதல் நவராத்திரி விடுமுறைபோது நேர்ந்த ஒரு சம்பவம் பற்றி. என்னவோ ஆரம்பித்து, எங்கெங்கோ சுற்றி வந்துவிட்டேன்.

நவராத்திரி வெள்ளிக்கிழமை அம்மா பாயசம் பண்ணி னாள். பண்ணிக்கொண்டிருந்தாள். சேமியாப் பாயசம்.

கரண்டி மேதி சேமாயி, நைவேத்யத்துக்கு எடுத்ததோ: பாட்டியிருந்தால் கேட்டிருப்பாள். பாட்டி சென்னையில் இருந்தாள். ஆனால் அம்மா அதுக்கும் பதில் வைத் திருப் பாள். ஆமாம்; சாமிபேரில் நாம்தானே குடிக்கிறோம்: ஏதோ பாயசத்தில் பாலை அம்பாள் ஏத்துண்டால் சரி , ' சேமியா பாயசம்னா எனக்கு உசிர்!

திடீரென சிவாவுக்கும், எனக்கும் போர் வந்துவிட்டது. காரணம் வேனுமா என்ன...? மறந்துபோச்சு, எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் அப்பவே என் தமிழ்ப் பாடத்தில் வந் தாச்சு! ஏதோ ஸ்லேட்டு குச்சி அல்ல துண்டு பென்சில் அல்ல. ஒட்டுபொம்மை அல்ல. ஒண்னுமே வேண்டாம். ஏன்டா என்னையே பாத்துண்டிருக்கே...? அது போதுமே-நேரே கைகலப்புத்தான். கட்டிப்பிடித்து விழுந்து அடுப்படியில், அம்மா காலடியில் பூனைக்குட்டி போல் உருண்டோம்.

உ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/91&oldid=544180" இலிருந்து மீள்விக்கப்பட்டது